கடையடைப்பு போராட்டத்திற்கு முழு ஆதரவு: பொதுமக்கள் பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் கடையடைப்புப் போராட்டத்திற்கு தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்புகிடைத்துள்ளது. ஆனால் இந்தப் போராட்டத்தால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வணிகர் சங்கப் பேரவை அழைப்பு விடுத்துள்ள இந்த 24 மணி நேரப் போராட்டம் இன்று காலை 6மணிக்குத் தொடங்கியது. கடையடைப்பு மட்டுமல்லாமல் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெறுகிறது.

தமிழக அரசு சமீபத்தில் விதித்துள்ள பல்வேறு வரிகளை எதிர்த்து இந்தப் போராட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்திற்கு தமிழகம் முழுவதும் நல்ல ஆதரவு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின்அனைத்துப் பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

சென்னையில்...

சென்னையின் பரபரப்பு மிகுந்த தி. நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் கிட்டத்தட்ட அனைத்துக் கடைகளுமேஅடைக்கப்பட்டிருந்தன.

அதே போல் பாரிமுனை, புரசைவாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் கடைகள் இழுத்து மூடப்பட்டிருந்தன. பலஇடங்களில் ஹோட்டல்களும் கூட அடைக்கப்பட்டிருந்தன.

மதுரையில்...

ஒரு நாள் கடையடைப்புப் போராட்டத்திற்கு மதுரையிலும் நல்ல வரவேற்பு நிலவியது. இங்கு 99 சதவீதத்திற்கும்மேற்பட்ட கடைகள் பூட்டப்பட்டிருந்தன.

நகரின் பல்வேறு பகுதிகளிலும் வணிகர் பேரவைச் சங்கத்தினர் உண்ணாவிரதமும் மேற்கொண்டுள்ளனர்.

கோவையில்...

இதற்கிடையே கோயம்புத்தூரிலும் சுமார் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

ஆங்காங்கே ஓரிரண்டு டீக்கடைகள் மற்றும் பேக்கரி கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன.

இதே போல் திருச்சி, சேலம், திருநெல்வேலி உள்பட பல பகுதிகளிலும் இந்தக் கடையடைப்புப் போராட்டத்திற்குநல்ல ஆதரவு நிலவுகிறது.

உண்ணாவிரதப் போராட்டம்:

கடையடைப்புடன் உண்ணாவிரதப் போராட்டத்திலும் வணிகர் சங்கப் பேரவையினர் ஈடுபட்டுள்ளனர். ஆனால்இந்த உண்ணாவிரதப் போராட்டம் 10 மணி நேரம் தான்.

சென்னையில் வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது.

இதே போல் தமிழகத்தின் பல ஊர்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது.

அனைத்து இடங்களிலும் போராட்டம் மிகவும் அமைதியாக நடந்து வருகிறது. இருந்தாலும் மாநிலம் முழுவதும்இந்தப் போராட்டத்தையொட்டி பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் பாதிப்பு:

இந்நிலையில் பெரும்பாலான கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குஉள்ளாகியுள்ளனர்.

கடையடைப்பு குறித்த செய்தி தெரியாமல் பஸ் ஏறி மார்க்கெட்டுகளுக்கு வந்த பொதுமக்கள் கடைகள்பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு ஏமாற்றமடைந்து நொந்து போய் மீண்டும் பஸ் பிடித்து வீடு திரும்பினர்.

பெரும்பாலான ஹோட்டல்களும் பூட்டப்பட்டிருந்ததால் அந்தச் சாப்பாட்டையே நம்பியுள்ள பெரும்பாலான ஆண்பேச்சிலர்கள் இன்று உணவு கிடைக்காமல் அறிவிக்கப்படாத உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+