பாதுகாப்பு தடைகளை மீறிச் சென்ற கலாம்
அகமதாபாத்:
குஜராத்தில் கலவரப் பகுதிகளைச் சுற்றிப் பார்த்த ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் பாதிக்கப்பட்ட மக்களுக்கானநிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்துமாறு குஜராத் அரசை வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார். அப்போது அவர்பல இடங்களில் பாதுகாப்பு அரண்களை எல்லாம் மீறிச் சென்றார்.
ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிறகு பலத்த சர்ச்சைகளுக்கிடையே முதன் முதலாக குஜராத்தில் சுற்றுப் பயணம்மேற்கொண்டுள்ளார் டாக்டர் கலாம்.
சமீபத்தில் இன வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று மாலை டாக்டர் கலாம் பார்வையிட்டார்.பாதிக்கப்பட்ட மக்களிடம் வெகு அருகில் நின்று குறைகளைக் கேட்டறிந்தார். ஆறுதலும் கூறினார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் வன்முறையால்பாதிப்புக்குள்ளான குழந்தைகள் படிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளையும் உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என்றும் குஜராத் அரசை அவர் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார்.
பல இடங்களிலும் டாக்டர் கலாம் பாதுகாப்புத் தடைகளை எல்லாம் மீறிச் சென்றார். மிகக் குறுகலானபாதைகளிலும் தெருக்களிலும் இறங்கி நடந்தே சென்று கலவரப் பகுதிகளைப் பார்வையிட்டார்.
அவர் இவ்வாறு பாதுகாப்புத் தடைகளை மீறிச் சென்றதை "பக் பக்"கென்று துடிக்கும் இதயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர் பாதுகாப்பு அதிகாரிகள். குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூட அடிக்கடி பதறிப் போய் தான்பார்த்துக் கொண்டிருந்தார்.
டாக்டர் கலாமைப் பார்ப்பதற்காக அப்பகுதிகளில் உள்ள மக்கள் எல்லாம் தங்கள் வீடுகளின் மாடிகளில் திரண்டுநின்றனர்.
பின்னர் மறைந்த விஞ்ஞானியும் தன்னுடைய அறிவியல் குருவுமான விக்ரம் சாராபாயின் வீட்டிற்குச் சென்றடாக்டர் கலாம், அவருடைய மனைவி மிருணாளினி சாராபாய் மற்றும் மகள் மல்லிகா ஆகியோரைச் சந்தித்துப்பேசினார்.
புஜ் விரைந்தார் கலாம்:
இந்நிலையில் தன்னுடைய இரண்டாவது நாள் பயணமாக இன்று காலை பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட புஜ்பகுதிக்குச் சென்றுள்ளார் டாக்டர் கலாம்.
இன்று காலை 8 மணிக்கே அகமதாபாத்திலிருந்து அவர் கிளம்புவதாக இருந்தது. ஆனால் ராஜ்பவனிலிருந்துவிமான நிலையம் செல்லும் வழியில் உள்ள இரண்டு கல்வி நிறுவனங்களைத் தனிப்பட்ட முறையில் அவர் பார்க்கவேண்டியிருந்ததால் புஜ் பயணம் தாமதமானது. தவிர, சுவாமி நாராயணன் என்ற கோவிலுக்கும் சென்று அவர்வழிபட்டார்.
மேலும் டாக்டர் கலாம் செல்ல வேண்டிய இந்திய விமானப் படை விமானத்தில் சிறு தொழில்நுட்பக் கோளாறுஏற்பட்டது. சோதனை ஓட்டத்தின் போது இந்தக் கோளாறைக் கண்டுபிடித்த விமானி அதை உடனடியாகச் சரிசெய்தார்.
பின்னர் அந்த விமானத்திலேயே புஜ் பகுதிக்கு டாக்டர் கலாம் புறப்பட்டுச் சென்றார்.
இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானப் படையைச் சேர்ந்த போயிங் 737 என்ற மற்றொருசிறப்பு மாற்று விமானமும் இன்று காலை டெல்லியிலிருந்து அகமதாபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications