இப்போதைக்கு அரசியல் வேண்டாம்: ரஜினிக்கு குரு அறிவுரை
சென்னை:
அரசியலில் நுழைய இப்போது சரியான நேரமில்லை என்று நடிகர் ரஜினிகாந்த்தின் குரு என்று கருதப்படும்அமெரிக்க சாமியாரான சுவாமி சச்சிதானந்தா மஹராஜ் கூறினார்.
கோவை மாவட்டம் ஆழியாறு பகுதியில் நடந்த உலக அமைதி மாநாட்டில் கலந்து கொள்ள வந்த அவர்நிருபர்களிடம் கூறுகையில்,
அரசியலில் இப்போது நுழைய வேண்டாம் என்று ரஜினிக்கு அறிவுறுத்தியுள்ளேன். அவர் அரசியலில்நுழைவதற்கான நேரம் இன்னும் வரவில்லை.
அரசியலுக்கு வருபவர்கள் தன்னலம் கருதாமல் நாட்டு நலன் பற்றியே சிந்திக்க வேண்டும். ஆனால் தற்போதுசுயநலத்தோடு தான் அனைவரும் அரசியலுக்கு வருகின்றனர்.
நம் நாட்டின் அரசியல் இப்போது இப்படித் தான் உள்ளது. இந்நிலையில் அரசியலுக்கு வருவதற்கு ரஜினிக்குத்தகுதியில்லை என்று தான் கூற வேண்டும்.
அரசியலில் கலக்காமல் ரஜினி இப்போது பல நல்ல விஷயங்கள் செய்து, நல்ல கருத்துக்களையும் சுதந்திரமாகக்கூறி வருகிறார். அரசியலுக்குப் போனால் அப்படியெல்லாம் கூற முடியாது.
அரசியலில் நிறைய கட்சிகள் உள்ளன. ரஜினி ஒரு கட்சிக்குப் போனால் மற்றொரு கட்சிக்கு எதிரியாகி விடுவார்.
தமிழக மக்கள் அனைவரும் சேர்ந்து "நீங்கள் தான் இருக்க வேண்டும்" என்று ரஜினியிடம் சொல்கிறார்களோஅப்போது நானே ரஜினியை அரசியலில் நிற்க வைப்பேன்.
அதே நேரத்தில் சினிமாவில் நடிப்பதையும் விட வேண்டாம் என்றும் ரஜினியிடம் கூறியுள்ளேன். நல்ல படங்களில்நடிப்பதன் மூலம் மக்களுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லலாம் என்பதால் நடிப்பதை இப்போதைக்கு விட்டு விடவேண்டாம் என்று ரஜினியைக் கேட்டுக் கொண்டுள்ளேன்.
"பாபா" படத்தின் முதல் பிரதிதியை சென்னையில் புதன்கிழமை வெளியிடுகிறேன். திரையுலகில் இதுவரை இல்லாதஅளவுக்கு இந்தப் படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்பும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
படத்திற்கு "பாபா" என்று பெயர் சூட்டியதுமே வெற்றி நிச்சயம் என்பது உறுதியாகி விட்டது. அமெரிக்காவுக்குவந்து என்னுடன் மூன்று வாரம் ரஜினி தங்கியிருந்த போது, நல்ல கதையுள்ள படங்களின் வரவு குறைந்து விட்டது.நீயும் படத்தில் நடித்து மூன்று ஆண்டுகளாகி விட்டன. நல்ல கதையுள்ள படம் பண்ணு என்று அவரிடம் நான்கூறினேன்.
பின்னர் நான் கூறிய அறிவுரைப்படி இப்படத்தின் கதையை ரஜினியே தயார் செய்தார். அந்தக் கதையைப் பார்த்துஅது சிறப்பாக இருப்பதாக நான் கூறினேன். அதன் பிறகு தான் ரஜினி இந்தப் படத்தைப் பண்ணினார்.
இந்தப் படம் ரஜினிக்கு மாறுபட்ட படமாக இருக்கும். நல்லதை நினைப்பவர்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும்என்றார் சுவாமி சச்சிதானந்தா.
அமெரிக்காவில் "பாபா"வைத் திரையிடும் உரிமையை சுவாமி சச்சிதானந்தாவின் மடத்திற்குத் தான் ரஜினிகொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications