தொடங்கியது வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்
சென்னை:
தமிழக அரசின் புதிய வரி விதிப்புகளைக் கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள்அடையாள கடையடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது
அரிசி மற்றும் பல்வேறு உணவுப் பாருட்கள் மீது வரி விதித்தது, ஒரு முனை வரியை மீண்டும்அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதிலும் இன்று அடையாளகடையடைப்புப் போராட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரவை சார்பில் முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை 6 மணிக்கு கடையடைப்புப் போராட்டம் தொடங்கியது. நாளை காலை 6 மணி வரைஇந்தப் போராட்டம் நடத்தப்படும்.
சென்னையில் உள்ள சேப்பாக்கம் விருந்தினர் இல்லம் மற்றும் வள்ளுவர் கோட்டம் ஆகியவற்றின் எதிரேவணிகர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
இதற்கிடையே சில வணிகர் சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. கடைகளை அடைக்கவேண்டாம் என்று வணிகர்களையும் அவை கேட்டுக் கொண்டுள்ளன.
கடையடைப்பு போராட்டத்தையொட்டி தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications