திமுக ஆட்சி ஊழல்: மேம்பாலங்களின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு
சென்னை:
சென்னையில் திமுக ஆட்சியின் போது கட்டப்பட்ட ஒரு மேம்பாலத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரும்நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் இன்று ஆய்வு நடத்தினர்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் கோடிக் கணக்கில் ஊழல்நடந்திருப்பதாக தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக கடந்த ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி, சென்னை மாநகர முன்னாள் மேயர் ஸ்டாலின்ஆகியோர் உள்பட பலரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் இந்த ஊழல் தொடர்பாக இதுவரை எந்தவிதமான வழக்கும் இன்னும் தொடரப்படவில்லை.
இந்நிலையில் சென்னையில் திமுக ஆட்சியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலங்களை அவ்வப்போது சி.பி.சி.ஐ.டி.போலீசாரும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் அவ்வப்போது சோதனை செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக அண்ணா பல்கலைக்கழகம் அருகே உள்ள மேம்பாலத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரி முகமதுஅலி தலைமையில் இன்று சோதனை நடந்தது. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
கடற்கரையில் அருகே கட்டப்பட்டுள்ள பாலங்களில் துருப்பிடிக்காத இரும்புக் கம்பிகள் பயன்படுத்தப்பட்டிருக்கவேண்டும். மேலும் இப்பகுதிகளில் உள்ள பாலங்களைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட காங்கிரீட்டும்உறுதியானதாகவும் தரமானதாகவும் இருக்க வேண்டும்.
இவற்றைத் தான் தற்போது சோதனை செய்து வருகிறோம். இங்கிருந்து எடுக்கப்பட்ட சில சாம்பிள்கள்பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. இவை தரமானவை தானா என்று நவீன முறையில பரிசோதிக்கப்படும்.
பின்னர் சோதனைகளின் முடிவைப் பொறுத்தே நாங்கள் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்என்றார் முகமது அலி.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications