நாளை சுதந்திர தினம்: டெல்லியில் விமானங்கள் பறக்கத் தடை
சென்னை:
நாளை நடைபெறவுள்ள இந்தியாவின் 55வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை மனித வெடிகுண்டுகள் மூலம் சீர்குலைக்க தீவிரவாதஇயக்கங்கள் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் தான் வரலாறு காணாத பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
நாளை காலை 6 மணி முதல் டெல்லியில் விமானங்கள் பறக்க தடை போடப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் உளவுப் பிரிவினர் நிறுத்தப்பட்டுள்ளனர். நகரின் முக்கியப் பகுதிகள் முழுவதும் போலீசார்தடுப்புகளை ஏற்படுத்து வாகன சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.
நாளை செங்கோட்டையில் பிரதமர் வாஜ்பாய் கொடியேற்றிவிட்டு உரையாற்றி முடிக்கும்வரை டெல்லி மீது எந்த விமானமும் பறக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றம், ங்ெகோட்டை, ஜனதிபதி மாளிகை ஆகிய இடங்களில் விமான எதிர்ப்பு பீரங்கிகள்நிறுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் நடந்தது மாதிரி விமானங்களை வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்பதால் இந்த நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.
மிகுந்த பாதுகாப்புடன் சுதந்திர தின ஒத்திகை அணி வகுப்பு இன்று நடந்தது.
டெல்லிக்கு அடுத்தபடியாக காஷ்மீரில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காஷ்மீரில் ஜெய்ஷ்-ஏ-முகம்மத்,லஷ்கர்-ஏ-தொய்பாவைச் சேர்ந்த 40 தீவிரவாதிகள் சுதந்திர தின நிகழ்ச்சிகளை சீர்குலைப்பதற்காகவே காஷ்மீருக்குள் ஊடுருவிஇருப்பதாகக் கூறப்படுகிறது.
ராணுவ முகாம்கள் மீது மனித வெடிகுண்டுகள் தாக்குதல் நடத்தலாம் என்பதால் உஷார் நிலையில் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரை அடுத்து நாட்டின் வட-கிழக்குப் பகுதிகளிலும் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ள. இது தவிர மும்பை, கொல்கத்தா,சென்னை, அகமதாபாத் ஆகிய நகரங்களிலும் பாதுகாப்பை தீவிரப்படுத்த மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதே போல ரயில்களிலும் ரயில் பாலங்கள், ரயில் தண்டவாளங்களிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில்....
சுதந்திர தினத்தையொட்டி தமிழகத்திலும் மிக பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலும்எக்மோரிலும் மெட்டல் டிடெக்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகளும் அவர்களது உடமைகளும் சோதனையிடப்படுகின்றனர்.
மீனம்பாக்கம் விமான நிலையத்தைச் சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். விமான நிலையத்துக்குள் நுழைய பயணிகள்தவிர அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை 6 மணி முதல் பார்வையாளர்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டுவிட்டது.
அதே போல திருச்சி ரயில் நிலையத்தில் ஒரு வாயில் தவிர மற்ற அனைத்து வாயில்களும் மூடப்பட்டுவிட்டன. இந்த ஒரு வாயில்வழியாகவே அனைத்துப் பயணிகளும் செல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. காவிரி, குடமுருட்டி, கொள்ளிடம் போன்ற ரயில்பாலங்களுக்கும் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
மதுரை ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமானவர்களை போலீசார் சோதனையிட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார்.
சுதந்திர தினத்தையொட்டி தமிழக மக்களுக்கு ஆளுநர் ராம்மோகன் ராவ், முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் வாழ்த்துக்களைத்தெரிவித்துள்ளார்.
அஸ்ஸாம்...
அஸ்ஸாமிலும் திரிபுராவிலும் நாளை தீவிரவாதிகள் தாக்குதலுக்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாகத் தெரிகிறது. அங்குள்ள இந்தியஎண்ணெய் நிறுவனங்களுக்குச் சொந்தமான முக்கிய கிடங்குகள், பைப்லைன்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
உல்பா, என்.டி.எப்.பி, தேசிய திரிபுரா விடுதலை அமைப்பு, திரிபுரா புலிகள் அமைப்பு ஆகிய தீவிரவாத இக்கங்கள் நாளை நடக்கும் சுதந்திரதின விழாவைப் புறக்கணிக்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. வேலை நிறுத்தம் செய்யவும் உத்தரவிட்டுள்ளன. இதனால்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அசோக் சக்ரா:
இந் நிலையில் தேசத்திற்காக உயிர் நீத்த வீரர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாளை பிரதமர் வாஜ்பாய் இந்த வீரர்களின்குடும்பத்தினரிடம் இந்த விருதுகளை வழங்கி கெளரவிப்பார்.
பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் மிகக் கடுமையாகப் போராடிய சீக்கிய ரெஜிமெண்டைச் சேர்ந்த சுபேதார் சுரீந்தர் சிங்குக்குஅசோக் சக்ரா விருது வழங்கப்படுகிறது. இது பரம்வீர் சக்ராவுக்கு இணையான விருதாகும். சுரீந்தர் சிங் 4 தீவிரவாதிகளுடன் தனி ஆளாகநின்று போராடினார். தன் உயிரை இழக்கும் முன் 4 தீவிரவாதிகளையும் சுட்டு வீழ்த்தினார்.
கூர்கா ரைபிள்ல் படையைச் சேர்ந்த மேஜர் உஷ்நிஷா ஜெய்ட்லி, பாராசூட் படை வீரர் நைப் சுபேதார் ஈஸ்வர் சிங், கூர்கா படையைச்சேர்ந்த தாவே பகதூர் தாபா ஆகியோருக்கு கீர்த்தி சக்ரா விருதுகள் தரப்படுகின்றன. காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் மிக வீரத்துடன்சண்டையிட்டவர்கள் இவர்கள். இவர்களில் ஜெய்ட்லி மற்றும் தாபா இருவரும் வீர மரணம் அடைந்துவிட்டனர்.
இது தவிர மேலும பல விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ராணுவ வீரர்கள் தவிர மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 40வீரர்களுக்கும் ஜனாதிபதி விருதுகள் அளிக்கப்படவுள்ளன.
மக்களும் வீடுகளில் கொடியேற்றலாம்:
இந்தியா சுதந்திரமடைந்த பிறகு முதல் முறையாக வீடு, கடை போன்ற இடங்களிலும் தேசியக் கொடியேற்ற சுப்ரீம் கோர்ட்அனுமதியளித்துள்ளது.
இதனால் சாதாரண பொதுமக்களும் தேசியக் கொடியை எங்கு வேண்டமானாலும் (கொடியை அவமதிக்காத வகையில்) ஏற்றிக்கொள்ள அனுமதி கிடைத்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. தேசியக் கொடியை சாதாரணமாகஅனைவரும் ஏற்றுவதற்குத் தடை இருந்து வந்தது. வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு தடை இருந்தது. ஆனால் இதைஎதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது.
நீண்ட காலமாக இந்த வழக்கு நடந்து வந்தது. கடந்த 7 மாதங்களுக்கு முன்புதான் மக்களும் கொடியேற்றலாம் என்ற தீர்ப்புவழங்கப்பட்டது. நிறுவனங்களில் ஏற்றுவது போல வீடுகளிலும், பொது இடங்களிலும் யார் வேண்டுமானாலும் தேசியக்கொடியை ஏற்றலாம் என்று சுப்ரீம் கோர்ட் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.
இதைத் தொடர்ந்து கடந்த குடியரசுத் தினத்தன்று தேசியக் கொடியை இந்தியா முழுவதிலும் வீடுகளில் ஏற்றி மக்கள் மனம்மகிழ்ந்தார்கள். தற்போது முதல் முறையாக சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை வீடுகளில் ஏற்ற மக்கள் தயாராகிவருகிறார்கள். இதையடுத்து தேசியக் கொடியின் விற்பனை சூடுபிடித்துள்ளது.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ்












Click it and Unblock the Notifications