"என்னை தெய்வத்துடன் ஒப்பிடாதீர்கள்": தொண்டர்களுக்கு ஜெ. உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தெய்வத்துடன் என்னை ஒப்பிட்டு விளம்பரமோ போஸ்டரோ எழுத வேண்டாம் என்று தன்னுடையதொண்டர்களை அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இது தொடர்பாக ஜெயலலிதா இன்று சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த ஆண்டு அதிமுக பிரம்மாண்டமான அளவில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்த போது அதிமுகதொண்டர்கள் பலரும் ஆர்வ மிகுதியால் என்னைப் பல்வேறு தெய்வங்களுடன் ஒப்பிட்டனர்.

அவ்வாறு ஒப்பிட்டுப் பேசியதோடு நில்லாமல் சுவரொட்டிகளிலும் சுவர்களிலும் அவ்வாறே எழுதினார்கள்.இன்னும் சொல்லப் போனால் பத்திரிக்கைகளில் வரும் விளம்பரங்களில் கூட தொண்டர்கள் என்னைதெய்வத்துடன் ஒப்பிட்டுக் கூறியிருந்தனர்.

இவ்வாறெல்லாம் செய்யக் கூடாது என்று அப்போதே நான் தொண்டர்களிடம் கூறியிருந்தேன். என்னைத்தெய்வத்தோடு ஒப்பிடுவதற்கு தனிப்பட்ட முறையில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. மேலும் இதனால் எனக்கு அவப்பெயர் தான் மிஞ்சியது.

இந்நிலையில் சமீபத்தில் கூட ஆர்வ மிகுதியால் என்னைத் தெய்வத்தோடு ஒப்பிட்டு ஒரு பத்திரிக்கைவிளம்பரத்தை அதிமுக தொண்டர்கள் வெளியிட்டுள்ளனர். பொதுப்பணித்துறை அமைச்சர் பன்னீர்செல்வம்மூலமாகத் தான் இது எனக்குத் தெரிய வந்தது.

"பழி ஓரிடம், பாவம் ஓரிடம்" என்பதற்கேற்ப தொண்டர்கள் ஆர்வ மிகுதியால் இவ்வாறு செய்வதால் எனக்குத் தான்அவப்பெயர் கிடைக்கிறது.

எனவே என்னைத் தெய்வத்தோடு ஒப்பிட்டு விளம்பரம் செய்வதை அதிமுக தொண்டர்கள் நிறுத்திக் கொள்ளவேண்டும்.

இது போன்ற விளம்பரங்கள் இனி எங்காவது வந்தால் அதற்கு அப்பகுதி அதிமுக பிரமுகர்களும் எம்.எல்.ஏக்களும்தான் பொறுப்பு. இது போன்ற விளம்பரங்கள் வெளிவராமல் இருக்கும் படி அவர்கள் தான் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+