படிப்புடன் விளையாடும் அரசு: மதுரையில் கல்லூரி மாணவிகள் போராட்டம்
மதுரை:
அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைப்பதைக் கண்டித்து இன்று ஆயிரக்கண்கான மாணவிகள் மதுரையில் ஆர்பாட்டம்நடத்தினர்.
தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைத்துவிட முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார். இதன்மூலம்மாணவர்கள் அதிக அளவில் கல்விக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கல்விக் கட்டணம் தவிர தேர்வுக் கட்டணமும் பல்கலைக்கழங்களில் அதிகம். அரசுக் கல்லூரிகளைக் கொண்டு போய் பல்கலைக்கழகங்ளில்இணைப்பதால் கல்வியின் தரம் எந்த அளவிலும் உயரப் போவதில்லை. ஆனால், கட்டணம் மட்டும் பல மடங்கு உயரும்.
நடுத்தர, ஏழை மாணவ, மாணவர்கள் தான் அரசுக் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இந்தக் கட்டண உயர்வுக்கு அவர்கள் கடும் எதிர்ப்புத்தெரிவித்து வருகின்றனர்.
இந் நிலையில் இன்று மதுரை மீனாட்சி அரசுக் கலைக் கல்லூரி மாணவிகள் திடீர் போராட்டத்தில் இறங்கினர். வகுப்புகளைப்புறக்கணித்துவிட்டு கல்லூரி வாசலில் கூடிய ஆயிரக்கணக்கான மாணவிகள் அரசின் திட்டத்ததை எதிர்த்து சாலை மறியலிலும் தர்ணாபோராட்டத்திலும் ஈடுபட்டனர்.
அந்த மாணவிகள் நமது நிருபரிடம் கூறுகையில், வீட்டில் வசதி இல்லை என்ற காரணத்தினால் தான் குறைந்த கட்டணம் வசூலிக்கும் இந்தக்கல்லூரியைத் தேடிப் பிடித்து சேர்ந்தோம். ஆனால், பல்கலைக்கழத்துடன் இணைக்கிறோம் என்று கூறி கட்டணத்தை உயர்த்த உள்ளார்கள்.
எங்களுக்கு அவ்வளவு கட்டணம் செலுத்த வசதியில்லை. எங்கள் எதிர்ப்பையும் மீறி பல்கலைக்கழகத்துடன் கல்லூரியை இணைத்தால்நாங்கள் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு வெளியேறும் நிலை உருவாகும் என்றனர்.
இதைச் சொல்லும்போது சில மாணவிகள் கண்கலங்கினர்.
பெண் கல்விக்கு உலகமே குரல் கொடுக்கும் நிலையில் இந்த ஏழை மாணவிகளின் படிப்பு பாதியில் நின்றால் அதற்காக அரசு வெட்கப்படவேண்டும்.












Click it and Unblock the Notifications