காங்-தமாகா இணைந்தன: வாசனுக்கு தேசிய பதவி
மதுரை:
காங்கிரஸ் கட்சியில் தமாகா இன்று முறைப்படி இணைந்தது. மதுரையில் சோனியா காந்தியின் தலைமையில் நடந்தமிக பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் இந்த இணைப்பு நடந்தது.
இந்த இணைப்பையடுத்து த.மா.கா. தலைவர் வாசனை காங்கிரஸ் கட்சியின் தேசியச் செயலாளராக நியமிப்பதாகசோனியா அறிவித்தார். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இளங்கோவனே தொடர்ந்து நீடிப்பார்.
இந் நிகழ்ச்சியில் பங்கேற்க இசட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கும் சோனியா காந்தி மதுரை வந்ததால் நகர்முழுவதும் மிக பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான கார்கள், வேன்கள், பஸ்களில் காங்கிரசார்மதுரையில் குவிந்தனர்.
மதுரையின் முக்கிய சாலைகள் முழுவதும் சோனியாவை வரவேற்கும் கட்-அவுட்டுகள், வரவேற்பு வளைவுகள்,போஸ்டர்கள், காங்கிரஸ் கொடிகள் கண்ணைப் பறிக்கின்றன.
மதுரையின் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சிவகங்கை ரோட்டை இணைக்கும் ரிங் ரோடு பகுதியில்மாபெரும் திடலில் இந்த மாநாடு நடந்தது.
மாநாட்டையொட்டி மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மதுரையைச் சுற்றியுள்ள மாவட்ட போலீசாரும்,ரிசர்வ் போலீசாரும், தென் மண்டல டி.ஜி.பியும் இந்தப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
காலையில் சோனியா தலைமையில் பாண்டிச்சேரியில் நடந்த விழாவில் பாண்டிச்சேரி மக்கள் காங்கிரஸ் கட்சிகாங்கிரசில் இணைந்தது. அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட சோனியா மாலை 4 மணிக்கு மதுரை வந்தார்.
விமான நிலையத்தில் அவரது ஹெலிகாப்டர் தரையிறங்கியது. அங்கிருந்து கார் மூலம் மாநாட்டுப் பந்தலுக்குசோனியா சென்றார்.
சோனியா முன்னிலையில் பேசிய த.மா.கா. தலைவர் வாசன் தனது கட்சியை காங்கிரசில் இணைப்பதாகஅறிவித்தார். இதை அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான காங்கிரஸ் மற்றும் த.மா.கா. தொண்டர்கள் கரகோஷம்எழுப்பி வரவேற்றனர்.
நிகழ்ச்சியையொட்டி தமிழக காங்கிரஸ் கட்சியின் அனைத்து மட்டத் தலைவர்களும் த.மா.காவின் அனைத்துநிர்வாகிகளும் மதுரையில் குவிந்துவிட்டனர். இதனால் லாட்ஜ்கள் அனைத்தும் நிரம்பி வழிந்தன.
சென்னை தொண்டர் மதுரையில் சாவு:
இந் நிலையில் இணைப்பு மாநாட்டுக்காக மதுரை சென்ற சென்னையைச் சேர்ந்த தொண்டர் மாரடைப்பால் இறந்தார்.
சென்னை பிராட்வே பகுதியில் வசித்து வந்தவர் நாராயணன். தீவிர காங்கிரஸ் தொண்டர். மதுரையில் நடைபெற்ற தமாகா-காங்கிரஸ் இணைப்பு விழாவில்கலந்து கொள்வதற்காக மதுரை சென்றிருந்தார் நாராயணன்.
அண்ணாநகரில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் சென்னையைச் சேர்ந்த தொண்டர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். நேற்று இரவு அவருக்கு திடீரென நெஞ்சு வலிஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்து விட்டதாகடாக்டர்கள் தெரிவித்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications