அண்ணா பல்கலை.யில் மைக்ரோசாப்ட் கல்வி மையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அண்ணா பல்கலைக்கழகத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் டாட் நெட் கல்வி மையத்தை உருவாக்கியுள்ளது. இந்தியப் பல்கலைக்கழகத்தில்தனது கல்வி நிலையத்தை மைக்ரோசாப்ட் நிறுவுவது இதுவே முதல்முறையாகும். இது அண்ணா பல்கலைக்கழகத்தின் தரத்துக்கு ஒருசான்றாக அமைந்துள்ளது.

இன்டர்நெட் தொடர்பான எக்ஸ்.எம்.எல். தொழில்நுட்பம் மற்றும் அடுத்த தலைமுறை கம்ப்யூட்டர் சாப்ட்வேர்கள் குறித்து இந்த மையத்தில்போதிக்கப்படும்.

இதன்மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தில் பதிவு பெற்ற 240 கல்லூரிகளில் மைக்ரோசாப்டின் புதிய தொழில்நுட்பக் கல்வி சென்றடையும்.

இது தவிர சாப்ட்வேர் குறித்து புதிய, நவீன கல்வித் திட்டத்தையும் அண்ணா பல்கலைக்கழகத்துக்காக மைக்ரோசாப்ட் உருவாக்கித் தரஉள்ளது.

இந்தக் கல்வித் திட்டத்தைத் துவக்கி வைத்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர்களில் ஒருவரான சோமசேகர், அடுத்த 3ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகத்துக்காக 10 மில்லியன் டாலர்களை மைக்ரோசாப்ட் ஒதுக்கியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில்ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் ஆராய்ச்சிகளில் ஈடுபடும் மாணவர்களுக்கும் நிதி உதவி செய்யவுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் பாலகுருசாமியும் உடன் இருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+