குப்தாவுக்கு கல்தா: ஜெ. அதிரடி- பொய் அறிக்கை தராததால் நடவடிக்கையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக உள்துறைச் செயலாளர் நரேஷ் குப்தா திடீரென்று மாற்றப்பட்டு விட்டார். அவருக்குப் பதில் புதியசெயலாளராக சையத் முனீர் ஹோதா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்ற பின்னர் நரேஷ் குப்தா உள்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.அதற்கு முன்பு சென்னா ரெட்டி கவர்னராக இருந்தபோது அவரது செயலாளராக நரேஷ் குப்தா இருந்தார். பின்னர்மாநில தேர்தல் அதிகாரியாக இருந்தார்.

மிக புத்திசாலித்தனமான, நேர்மையான, மென்மையான அதிகாரி என்று பெயர் பெற்றவர் நரேஷ் குப்தா.அப்படிப்பட்டவர் எப்படி உள்துறை போன்ற மிகுந்த டென்ஷன் ஆன பொறுப்பை எப்படி வகிக்க முடியும் என்றுஅவர் அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டபோது கேள்வி எழுந்தது.

ஆனால் நரேஷ் குப்தா தனது பொறுப்பை திறம்பட கவனித்து வந்தார். சமீபத்தில் முதல்வருடன் சில விஷயங்களில்அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து நரேஷ்குப்தா விரைவில் மாற்றப்படலாம் என்றும்எதிர்பார்க்கப்பட்டது.

குறிப்பாக வைகோ கைது செய்யப்படுவது குறித்து போலீஸ் துறையை கவனித்து வரும் குப்தாவிடம் கூடஜெயலலிதா தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. அதே போல பல விஷயங்களில் குப்தா புறக்கணிக்கப்பட்டுவந்தார்.

இந் நிலையில் மதுரையில் சில தினங்களுக்கு முன் திமுகவினர் மீது நடந்த தடியடி சம்பவம் தொடர்பாக போலீஸ்அதிகாரிகளை குப்தா கடிந்து கொண்டதாகத் தெரிகிறது.

நெசவாளர்களுக்கு கஞ்சி வழங்க திமுகவினருக்கு அனுமதி தந்த இடத்துக்கு மிக அருகிலேயே ஏன் பிரியாணிவழங்க அதிமுகவினருக்கும் அனுமதி தந்தீர்கள் என அவர் மதுரை போலீஸ் கமிஷ்னருக்கு டோஸ் விட்டுள்ளார்குப்தா.

மேலும் திமுகவினர் மீது நடந்த போலீஸ் தடியடியை நியாயப்படுத்தி அறிக்கை விடவும் குப்தா மறுத்துவிட்டதாகத்தெரிகிறது. இதையடுத்து மாஜி முதல்வர் பன்னீர்செல்வத்தின கீழ் பணிபுரியும் பொதுப் பணித்துறைச் செயலாளர்பிச்சாண்டி மூலம் தடியடியை நியாயப்படுத்தி அறிக்கை விடச் செய்தது தமிழக அரசு.

இந்தக் காரணங்களால் குப்தாவை முதல்வர் ஜெயலலிதா பந்தாடியுள்ளதாகத் தெரிகிறது.

தற்போது அவரை மாநில திட்டக் குழு உறுப்பினராக தமிழக அரசு நியமித்துள்ளது.

புதிய உள்துறைச் செயலாளராக சையத் முனீர் ஹோதா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது சுகாதாரத்துறைசெயலாளராக இருக்கிறார்.

சமீபத்தில் தான் தலைமைச் செயலாளர் சங்கர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு டெல்லியில் மத்திய அரசுப்பதவியில் அமர்ந்தார். இப்போது அவருக்கு அடுத்த நிலையில் இருந்த மூத்த அதிகாரி தூக்கப்பட்டுள்ளார்.

கருணாநிதி குற்றச்சாட்டு:

இதற்கிடையே நரேஷ் குப்தாவை தூக்கியடித்ததற்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நியாயமாக செயல்பட்ட ஒரே காரணத்தினால் குப்தா நீக்கப்பட்டுள்ளார். திமுகவினரைத் தாக்கியதுதொடர்பாக பொய்யான அறிக்கைவிட குப்தா மறுத்தாலும் தவறைச் சுட்டிக் காட்டியதாலும் அவரை ஜெயலலிதா மாற்றியுள்ளார்.

குப்தா அறிக்கை விடாத காரணத்தால் போலீஸ் டி.ஜி.பி. மூலம் சமாளிப்பு அறிக்கையை விடச் செய்தார் ஜெயலலிதா.

அவரை நீக்கியதன் மூலம் நியாயமான அதிகாரிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+