ரெட்டை வேடம் போடும் ரஜினி: திருமாவளவன் குற்றச்சாட்டு
திருச்சி:
பாமக தலைவர் டாக்டர் ராமதாஸைத் தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர்திருமாவளவனும், நடிகர் ரஜினிகாந்த் குறித்து கடுமையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் நடந்த வன்னியர் சங்கக் கூட்டத்தில் பேசிய ராமதாஸ், ரஜினி குறித்து கடுமையானகருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.
ஒருமையில் ரஜினி குறித்துப் பேசிய ராமதாஸ் தமிழக இளைஞர்களை ரஜினி கெடுத்து விட்டார். அவரையெல்லாம்வளர்த்து விடாதீர்கள் என்றும் கடுமையாக சாடினார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ராமதாஸின் பரம வைரியான விடுதலைச் சிறுத்தைகள்கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவனும் ரஜினியைக் கடுமையாக சாடியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
கடந்த 15 வருடமாகவே ரஜினி அரசியலுக்கு வரப் போகிறார், வரப் போகிறார் என்று கூறிக் கொண்டு பூச்சாண்டிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அரசியலுக்கு வர விரும்பினால் அவர் வரட்டுமே, யார் தடுக்கிறார்கள்? அதைவிடுத்து எதற்காக சும்மா சும்மா கூறிக் கொண்டேயிருக்க வேண்டும்.
தமிழக இளைஞர்களைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. கடந்த 30 ஆண்டுகளாக இவரும், தமிழ் சினிமாவும்தமிழக இளைஞர்களைக் கெட்ட வழியில் கொண்டு சென்று கொண்டுள்ளனர். இவர்கள் விஷயத்தில் தமிழகஇளைஞர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
"பாபா" படம் இன்னும் வெளியாகவேயில்லை. அதற்குள் ரூ.50 கோடிக்கு , ரூ.60 கோடிக்கு விற்கப்பட்டு விட்டதுஎன்கிறார்கள். அப்படி என்ன அந்தப் படம் பெரிய உலக அதிசயமா? அதுவும் ஒரு சாதாரண சினிமா தானே?
ரஜினியை விடச் சிறந்த நடிகர்கள் உலகில் பல பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு கூட இத்தனை பெரியவிளம்பரம், படோடாபம் கொடுக்கப்பட்டதில்லை. ஆனால் இந்த "பாபா" படம் குறித்து என்னென்னவோவிளம்பரம் செய்கிறார்கள். இது மிகவும் வருந்தத்தக்கது.
வீரப்பன் விவகாரத்தில் ரஜினி இரட்டை வேடம் போடுகிறார். தமிழகத்தில் வீரப்பன் குறித்து அவர் வாயேதிறப்பதில்லை. ஆனால் அவரது சொந்த மாநிலமான கர்நாடகத்திற்குச் சென்று விட்டால், வீரப்பன் ராட்சசன்என்கிறார். அவனை அழிக்க வேண்டும் என்கிறார். ஆவேசமாகப் பேசுகிறார்.
இங்கு ஒரு நிலை, அங்கு ஒரு நிலை என அவர் போடும் இரட்டை வேடத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
வீரப்பன் குறித்து ரஜினி கூறிய கருத்துக்களுக்கு பாமக தலைவர் ராமதாஸ் கொடுத்துள்ள பதில் சரியானது தான்.ஆனால் வீரப்பன் தனது ஜாதிக்காரன் என்பதற்காக ராமதாஸ் ரஜினியை சாடியுள்ளார். இது மோசமானது,கண்டிக்கத்தக்கது என்றார் திருமாவளவன்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications