சைக்கிள் பயணம் முடிகிறது
தாய்க் கட்சியான காங்கிரஸ் கட்சியிலிருந்து அதிரடியாக பிரிந்து தமிழக அரசியலில் பெரும் புரட்சி படைத்த தமிழ்மாநில காங்கிரஸ் இன்று மீண்டும் தாய்க் கட்சியுடன் இணைகிறது.
அது 1996ம் ஆண்டு. ஊழல்வாத ஆட்சி புரிந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி வைத்துத்தேர்தலைச் சந்திக்கக் கூடாது என்று ஜி.கே. மூப்பனார் தலைமையில் தமிழக காங்கிரஸ் கட்சியினர் அகில இந்தியகாங்கிரஸ் தலைமையிடம் உறுதியாகக் கூறினர். ஆனால் அதையும் மீறி அதிமுகவுடன்தான் கூட்டு என்றுநரசிம்மராவ் தலைமையில் இயங்கிய காங்கிரஸ் மேலிடம் கூறி விட்டது.
இதையடுத்து யாருமே எதிர்பாராத வகையில், காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்தார் மூப்பனார். தமிழ் மாநிலகாங்கிரஸ் என்ற புதிய கட்சியையும் உருவாக்கினார். நடிகர் ரஜினிகாந்த்தின் குரலுக்கு அப்போது மக்கள் ஆதரவுஇருந்ததால் திமுகவுடன் கூட்டணி வைத்து தமாகா சட்டசபைத் தேர்தலைச் சந்தித்தது. அமோக வெற்றி பெற்றதுஇக்கூட்டணி.
கட்சி ஆரம்பித்த சில நாட்களிலேயே தேர்தலைச் சந்தித்து, 60க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களைப் பெற்று சாதனைபடைத்தார் மூப்பனார். அத்தோடு 20 எம்.பிக்களையும் பெற்று மத்திய அரசிலும் அவரது முக்கியத்துவம்அதிகரித்தது.
ஒரு கட்டத்தில் பிரதமர் பதவியே அவரைத் தேடி வந்தது. ஆனால், அதை திமுக தலையிட்டு கெடுத்தது.இதையடுத்து திமுகவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அக்கூட்டணியிலிருந்து விலகத் தொடங்கினார் மூப்பனார்.
திமுகவிலிருந்து விலகவும், அடுத்த சட்டசபைத் தேர்தல் வரவும் சரியாக இருந்தது. அந்த நேரத்தில் யாருமேஎதிர்பாராத வகையில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார் மூப்பனார். கெஞ்சிக் கெஞ்சி சீட் பெற்று தேர்தலைச்சந்தித்தார். இந்தத் தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடித்தது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 20 இடங்களில்வெற்றி கிடைத்தது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியோடு மீண்டும் சேர்ந்து விடுமாறு மூப்பனாருக்கு தூது வந்தது. ஆனால் அதைபரிசீலித்துப் பார்த்த அவர் முதலில் அதற்கு ஒத்துக் கொண்டார். பேச்சுவார்த்தைகள் கூட நடந்தன.
ஆனால் கடைசி நேரத்தில் மூப்பனார் மறுத்து விட்டார். இணைந்து செயல்படுவோம் ஆனால் இணைப்புவேண்டாம் என்று கூறி விட்ட அவர் தமாகா தனித்தே செயல்படும் என்றார்.
இந்தச் சூழ்நிலையில் மூப்பனாரின் மரணம் கட்சிக்கு பெரும் அடியாய் விழுந்தது. தமாகாவின் பலம் வெகுவாககுறைந்து வந்தது. அவரது மகன் ஜி.கே. வாசன் தமாகாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
ஆனால் அரசியல் விவேகம் அவரிடத்தில் சுத்தமாக இல்லை என்று தமாகா தலைவர்கள் பலர் அதிருப்தியுடன்காணப்பட்டனர். பல இரண்டாம் நிலைத் தலைவர்கள் கட்சிக் கூட்டங்களில் கலந்து கொள்வதே இல்லை. கட்சியின்முக்கியஸ்தர்கள் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தனர். கிட்டத்தட்ட கட்சி இயங்காமலேயே இருந்து வந்தது.
இந்த நிலையில் தான் காங்கிரஸ் கட்சியுடன், தமாகாவை இணைப்பது தொடர்பாக காங்கிரஸ் தரப்பிலிருந்துமீண்டும் தூது வந்தது. இம்முறை கொஞ்சம் மிரட்டலோடு.
வாசனுக்கும், தனியாக கட்சியை நடத்துவதில் விருப்பம் இல்லை என்பதால் இணைப்புக்கு ஒப்புதல் கொடுத்துவிட்டார். பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு மதுரையில் இணைப்பு விழாவை நடத்தலாம் என்றும்முடிவானது.
இதோ, இன்று இரு கட்சிகளும் இணையப் போகின்றன. பெரும் எதிர்பார்ப்போடு நடைபோடத் தொடங்கியதமாகா, ஒரு சாதனையும் புரியாமல் தாய் மடியில் தஞ்சம் அடையப் போகிறது.
மூப்பனார் இல்லாத தமாகாவை நினைத்துப் பார்க்க முடியாது என்ற அரசியல்வாதிகளின் வாதத்தைஉண்மையாக்கும் விதத்தில் இன்று முதல் தமாகா என்ற கட்சி தமிழகத்தில் இருக்காது.
நீண்ட நெடிய வரலாறு படைக்கப் போகிறது என்று பலரும் காத்திருந்த வேளையில் சிறுகதையாக முடிந்துவிட்டதுதமாகாவின் வலராறு.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications