"மாஜி" அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் திமுக அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், ஜெனிபர் சந்திரன், அதிமுக அமைச்சராக இருந்து பின்னர்திமுகவுக்குத் தாவிய ரகுபதி மற்றும் எம்.எல்.ஏ. ரங்கநாதன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

இவர்கள் அனைவருடைய வீடுகளிலும் போலீசார் நேற்று ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள இவர்களுடைய இடங்களில் போலீசார் நடத்திய இந்தச்சோதனையில் முக்கியமான ஆவணங்கள் கிடைத்தன.

இதையடுத்து ஆறுமுகம், ஜெனிபர், ரகுபதி மற்றும் ரங்கநாதன் ஆகிய நான்கு பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார்வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

சொத்துக்கள் விவரம்:

இதற்கிடையே இந்த நான்கு பேரும் குறுகிய காலத்திலேயே நிறைய சொத்துக்களைக் குவித்துள்ளனர் என்றவிவரமும் தெரிய வந்துள்ளது. அவர்களுடைய சொத்துக்களின் விவரம்:

ஜெனிபர்: திருச்செந்தூர் அமலநகர் சர்வே எண் 136ல் ஒரு வீடு, கதவு எண் 26ல் மற்றொரு வீடு, திருச்செந்தூர்மேளா கிராமத்தில் 27 சென்ட் நிலம் மற்றும் 6 ஏக்கர் நிலம், 2 அம்பாசடர் கார்கள், 1998ல் வாங்கப்பட்ட டாடாசுமோ, இன்டிகா மற்றும் மாருதி கார்கள் மற்றும் பல சொத்துக்கள்.

ரகுபதி: புதுக்கோட்டையில் வீடு, லட்சுமிபுரத்தில் நிலம், கற்பக விநாயகர் கோவில் அறக்கட்டளை மூலம்ஏராளமான சொத்துக்கள், புதுக்கோட்டை சிவபுரத்தில் உள்ள கல்லூரியில் பல கோடி ரூபாய் முதலீடு.

ரங்கநாதன்: சென்னையின் பல இடங்களிலும் மனைவி பெயரிலும் தன் பெயரிலும் வாங்கியுள்ள நிலங்கள்.வருமானத்துக்கு அதிகமாக ரூ.1 கோடிக்கும் அதிகமாக இவர் சொத்து சேர்த்திருக்கலாம் என்று லஞ்ச ஒழிப்புபோலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+