சென்னையில் டாக்டர் வீட்டில் ரூ.1 லட்சம் நகை-பணம் கொள்ளை
சென்னை:
சென்னையில் எம்.பி.பி.எஸ். வீட்டிலிருந்து கொள்ளையர்கள் ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகைகள், வெள்ளிப்பாத்திரங்கள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
சென்னை கே.கே. நகரில் வெங்கட்ராமன் என்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் வசித்து வருகிறார். அவருடைய மகன்சுப்பிரமணியம் பாண்டிச்சேரியில் டாக்டராக உள்ளார். சுப்பிரமணியத்தின் மனைவி மகாலட்சுமியும் டாக்டர் தான்.
டாக்டர் சுப்பிரமணியம் விடுமுறைக்காக சென்னை வந்திருந்தார். நேற்று இரவு அவர்கள் வீட்டில் அனைவரும்தூங்கிக் கொண்டிருந்த போது அங்கு கொள்ளையர்கள் வந்துள்ளனர்.
ஜன்னல் ஓரமாகவே அந்த வீட்டில் பீரோ வைக்கப்பட்டிருப்பதைக் கண்ட கொள்ளையர்கள், அதை நீண்டகொக்கியால் ஜன்னல் பக்கமாகவே திருப்பியுள்ளனர்.
பின்னர் பீரோவை உடைத்து அதிலிருந்து 30 பவுன் நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள் மற்றும் ரூ.15,000 பணம்ஆகியவற்றைக் கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.
வீட்டிலுள்ளவர்கள் காலையில் எழுந்து பார்த்த போது தான் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.
இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து தடய நிபுணர்களின் உதவியுடன் சோதனை நடத்திய போலீசார்கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications