"பாபா" பாடலை பாடுவதா?- நெய்வேலி பாட்டுக் கச்சேரியில் அடிதடி
நெய்வேலி:
நெய்வேலியில் "பாபா" படப் பாடலைப் பாடுவதா வேண்டாமா என்பது தொடர்பாக இரு தரப்பினருக்கிடையேகடும் மோதல் ஏற்பட்டது.
ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நெய்வேலி தெர்மல் பஸ் நிலையம் அருகே பாட்டுக்கச்சேரிக்கு என்.எல்.சி. பஸ் ஊழியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
கடலூரைச் சேர்ந்த ஒரு ஆர்கெஸ்ட்ரா குழுவினர் இந்தக் கச்சேரியில் திரைப்படப் பாடல்களைப் பாடினார்கள்.
அப்போது பஸ் ஊழியர்களில் ஒருவரான பழனி என்பவர் "பாபா" படத்தில் வரும் ஒரு பாடலைப் பாட வேண்டும்என்று கோரி அதற்காக ரூ.501 பணத்தையும் ஆர்கெஸ்ட்ரா குழுவினரிடம் கொடுத்தார்.
உடனே அருகிலிருந்த பாமகவின் நகரச் செயலாளர் என். சக்ரவர்த்தி உள்ளிட்ட சிலர் "பாபா" பாடலைப் பாடக்கூடாது என்று கூறி ரூ.1,000 பணத்தை ஆர்கெஸ்ட்ரா குழுவினரிடம் கொடுத்தனர்.
இதனால் விக்கித்துப் போன ஆர்கெஸ்ட்ரா குழுவினர் பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தனர்.
இதற்கிடையே "பாபா" பாடல் வேண்டும் என்று கூறியவர்களுக்கும் வேண்டாம் என்று கூறியவர்களுக்கும்இடையே கடும் கைகலப்பு ஏற்பட்டது.
ஒருவரையொருவர் நன்றாகத் தாக்கிக் கொண்டனர். சிறிது நேரத்தில் ஒருவரையொருவர் கற்களாலும் எறிந்துதாக்கிக் கொண்டனர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காகப் போடப்பட்டிருந்த போலீசார் உடனே தலையிட்டு கூட்டத்தைக்கலைத்தனர்.
இதற்கிடையே ஆர்கெஸ்ட்ரா குழுவினர் பாட்டுக் கச்சேரியைப் பாதியிலேயே முடித்துக் கொண்டு கிளம்பிவிட்டனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications