தர்மபுரி: சந்தையில் பஸ் புகுந்ததில் கர்ப்பிணி, 9 பேர் உடல் நசுங்கி சாவு
தர்மபுரி:
தர்மபுரி அருகே கட்டுப்பாட்டை இழந்த ஒரு பஸ் சந்தையில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தில் புகுந்ததில் அந்தபஸ்சின் சக்கரத்தில் சிக்கி ஒரு கர்ப்பிணி உள்பட 10 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியிலிருந்து இண்டூர் வழியாக தர்மபுரி நோக்கி ஒரு டவுன் பஸ் நேற்று மாலைசென்று கொண்டிருந்தது.
மாலை சுமார் 6.30 மணியளவில் இண்டூர் அருகே வந்து கொண்டிருந்த போது பஸ்சின் பிரேக் திடீரென்று வேலைசெய்யவில்லை. இதனால் திடுக்கிட்ட பஸ் டிரைவர் முனுசாமி எதிரே வந்த லாரி மீது பஸ் மோதி விடாமல்இருப்பதற்காக பஸ்சைத் திருப்பினார்.
இதையடுத்து கட்டுப்பாட்டை இழந்த பஸ் இண்டூர் சந்தையில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தில் வேகமாகப் புகுந்தது.இதைக் கண்டதும் சந்தையில் கூடியிருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு சிதறி ஓடினார்கள். ஆனால் பஸ்தாறுமாறாக ஓடியதில் அதன் சக்கரத்தில் ஏராளமான மக்கள் மாட்டிக் கொண்டு நசுங்கி விட்டனர்.
இப்படித் தறிகெட்டு ஓடிய பஸ் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒரு ஜீப்பின் மோதிய பிறகே நின்றது.
இதற்குள் பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய ரஞ்சித் (15), சின்னசாமி (20), ரங்கசாமி (40), ராஜு (16), கோபால் (40),சடையன் (35) மற்றும் பெருமாள் (36) ஆகிய ஏழு பேரும் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர்.
பஸ் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்த 23 பேர் உடனடியாக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு ஆறுமுகம் (35) - சுமதி (26) என்ற தம்பதி மற்றும் கணேசன் (21) ஆகிய மூன்று பேரும் சிகிச்சைபலனளிக்காமல் உயிரிழந்தனர். இதில் சுமதி கர்ப்பமாக இருந்ததாகத் தெரிய வந்துள்ளது.
காயமடைந்தவர்களில் ஐந்து பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதையடுத்து அவர்கள் சேலம் அரசுமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
நேற்று வாரச் சந்தை கூடும் நாள் என்பதால் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சந்தையில் கூடியிருந்தமக்கள் கூட்டத்தில் பஸ் புகுந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இறந்தவர்கள் அனைவரும் பழைய இண்டூர், பாப்பாரப்பட்டி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்துக்குக் காரணமான டிரைவர் முனுசாமியைப் போலீசார் கைது செய்தனர். கண்டக்டர் பிச்சமுத்து தப்பிஓடி விட்டார்.
சம்பவம் நடந்த இடத்தை தர்மபுரி மாவட்ட கலெக்டர் சித்திக் மற்றும் எம்.எல்.ஏ. பாரிமோகன் ஆகியோர்பார்வையிட்டு, பின்னர் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
இறந்தவர்கள் குடும்பத்துக்கு அரசு ரூ.50,000 இழப்பீடு:
இதற்கிடையே இந்தச் சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 இழப்பீடுவழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து இந்த இழப்பீட்டு உதவி அளிக்கப்படும் என்று தமிழக அரசுவெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications