வாஜ்பாயுடன் அதிமுக எம்.பிக்கள் சந்திப்பு
டெல்லி:
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியை சமாளிக்க ரூ.720 கோடி நிவாரணத் தொகையை உடனடியாக வழங்கவேண்டும் என்று பிரதமர் வாஜ்பாயை அதிமுக எம்.பிக்கள் வலியுறுத்தினர்.
டெல்லியில் இன்று வாஜ்பாயை நேரில் சந்தித்த பி.எச். பாண்டியன் தலைமையிலான 19 அதிமுக எம்.பிக்கள் இதுதொடர்பாக ஒரு மனுவையும் அவரிடம் அளித்தனர்.
தமிழகத்தில் இந்த ஆண்டு 19 மாவட்டங்கள் வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் 2 லட்சம் டன்அரிசியையும் உடனடியாக தமிழகத்திற்கு அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் பிரதமரை வற்புறுத்தினர்.
பின்னர் நிருபர்களிடம் பாண்டியன் பேசுகையில்,
நிதி அமைச்சர் ஜஸ்வந்த் சிங்குடன் பேசி தமிழகத்திற்கு நிதியை அளிக்க முயற்சிப்பேன் என்று பிரதமர்உறுதியளித்தார்.
பிரதமர் பேசிய தொணியிலிருந்தே மத்திய அரசு தமிழகத்திற்கு 2 லட்சம் டன் அரிசியை உடனடியாக வழங்கும்என்ற நம்பிக்கை உள்ளது என்றார் பாண்டியன்.
பாண்டியனுடன் தினகரன், தலித் எழில்மலை, சரோஜா, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட 17 அதிமுக எம்.பிக்கள்பிரதமரைச் சந்தித்தனர்.
தமிழக வறட்சியைச் சமாளிப்பதற்காக ரூ.720 கோடி நிவாரணத் தொகையைக் கேட்டு சமீபத்தில் தான் மத்தியஅரசுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசை கண்டித்து இ.கம்யூ. ஆர்ப்பாட்டம்:
தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கக் கோரி தமிழக அரசை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிசார்பில் தாலுகா மற்றும் மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாகவும், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தொகை வழங்கக் கோரியும், வறட்சி நிலை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றுகோரியும் தமிழகம் முழுவதிலும் உள்ள தாலுகா மற்றும் மாவட்ட தலைநகரங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிசார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.












Click it and Unblock the Notifications