20 செயற்கைக் கோள்களை ஏவ இஸ்ரோ திட்டம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
நடப்பு ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் 20 செயற்கைக் கோள்களையும், 16 ஏவுகலன்களையும் (ராக்கெட்) விண்ணில்செலுத்த இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் "இஸ்ரோ" திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக திருச்சியில் இஸ்ரோ சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இதுவரை இஸ்ரோ சார்பில் 245 தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 30 ஆண்டுகளில் 34 செயற்கைக் கோள்களையும், 15 ஏவுகலன்களையும் இஸ்ரோ ஏவியுள்ளது.
மொத்தம் 9,000க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் இஸ்ரோவின் செயற்கைக் கோள் மற்றும்ராக்கெட் திட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications