அதிருப்தி எம்.எல்.ஏக்கள் விவகாரம்: காளிமுத்துவுக்கு பா.ம.கா, த.மா.கா கடும் எதிர்ப்பு
கும்பகோணம்:
காங்கிரஸ்- த.மா.கா. இணைப்பை ஏற்காத 5 எம்.எல்.ஏக்களையும் தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலேயே தொடரசபாநாயகர் காளிமுத்து அனுமதி தந்திருப்பதை எதிர்த்து வழக்குத் தொடரப் போவதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின்செயலாளர் ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.
சமீபத்தில் இந்த இரு கட்சிகளும் இணைந்தன. ஆனால், குமாரதாஸ், ஹக்கீம் போன்ற அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் இந்தஇணைப்பை எதிர்த்தனர். தங்களுடன் மேலும் 3 பேரை சேர்த்துக் கொண்டு 5 பேரும் காளிமுத்துவிடம் தங்களை தொடர்ந்துத.மா.காவில் தொடர அனுமதி கோரினர்.
இதை காளிமுத்து ஏற்றுக் கொண்டு அவர்கள் த.மா.காவிலேயே தொடர்வார்கள் என்று அறிவித்தார்.
இந் நிலையில் கும்பகோணத்தில் ராஜிவ் காந்தி பிறந்த நாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வாசன் நிருபர்களிடம்கூறுகையில், காளிமுத்துவின் முடிவை சட்டரீதியாக எதிர்ப்போம் என்றார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், காவிரியில் தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் ஒரு வேளை சோற்றுக்கே திண்டாடும் நிலைஉருவாகியுள்ளது. காவிரியில் இருக்கும் நீரை இரு மாநிலங்களும் சரி சமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். தமிழக அரசுஉடனே அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்றார்.
காளிமுத்து மீது ராமதாசும் புகார்:
இந் நிலையில் கட்சித் தலைமைக்கு எதிராக போர்க் கொடி தூக்கும் எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகர் காளிமுத்துநடுநிலைமையாக நடந்து கொள்ளவில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரசும்- த.மா.காவும் இணைந்தது தொடர்பாக காளிமுத்துவுக்குஇன்னும் அதிகாரப்பூர்வமாகக் கடிதம் கூடத் தரப்பட்டவில்லை.
ஆனால், பத்திரிக்கை செய்திகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு 5 எம்.எல்.ஏக்களையும் தொடர்ந்து த.மா.காவில் தொடரஅனுமதிப்பதாகக் கூறியுள்ளார்.
ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியின் இரு எம்.எல்.ஏக்கள் கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். அவர்களை பதவி நீக்கும்செய்யும் விவகாரத்தில் பத்திரிக்கை செய்திகளை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது என காளிமுத்து கூறியுள்ளார்.
இந்த விவகாரங்களில் சபாநாயகர் நடுநிலையுடன் செயல்படவில்லை. அவரது செயலை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத்தொடருவோம் என்றார் ராமதாஸ்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications