தமிழகத்தில் வெடிக்கிறது ஆசிரியர்-மாணவர் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அரசு கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைப்பதை எதிர்த்து தமிழகம் முழுவதும் மாணவர்களின்போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

அதே போல அரசின் இந்தத் திட்டத்தை எதிர்த்து கல்லூரி ஆசிரியர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 67 அரசுக் கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர்களும் மாணவ-மாணவிகளும் இந்தப்போராட்டத்தில் குதித்துள்ளனர். இன்று ஆசிரியர்களும் மாணவர்களும் வகுப்புக்களைப் புறக்கணித்து தர்ணாபோராட்டங்களில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகள் அனைத்தும் அந்தந்த பகுதிகளில் உள்ள பல்கலைக்கழகங்களுடன்இணைக்கப்படும் என்று தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது.

இதனால் கல்விக் கட்டணம் பல மடங்கு அதிகரிக்கும், தேர்வுக் கட்டணமும், சான்றிதழ்களுக்கான கட்டணமும்அதிகரிக்கும் என்பதால் இந்தத் திட்டத்தை மாணவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.

அதே போல அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைப்பதால் பலவிதமான சலுகைகளைஆசிரியர்கள் இழக்க வேண்டிய நிலை ஏற்படும். பல்கலைக்கழகங்களின் பாலிடிக்சிஸ் சிக்கி கல்லூரிகள்சின்னாபின்னாவாகிவிடும் என்ற அச்சமும் ஆசிரியர்களை பயமுறுத்தி வருகிறது. இதனால் அவர்களும் இந்தத்திட்டத்தை எதிர்க்கின்றனர்.

மதுரை, தஞ்சை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசுக் கல்லூரி மாணவர்களும் மாணவிகளும் கடந்தசில வாரங்களாகவே வகுப்புக்களைப் புறக்கணித்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், இதை அரசுகண்டு கொள்ளாமல் இருந்து வந்தது.

இன்று இந்தப் போராட்டம் சென்னைக்கும் உள்ளிட்ட பிற நகர்களுக்கும் பரவியது. சென்னை ராணி மேரிகல்லூரி மற்றும் பாரதி மகளிர் கல்லூரி மற்றும் பல்வேறு அரசுக் கல்லூரி மாணவ-மாணவிகளும் போராட்டத்தில்குதித்தனர். அவர்கள் இன்று சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந் நிலையில் தமிழகத்தில் உள்ள 67 அரசுக் கல்லூரி ஆசிரியர்களும் நாளை முதல் (புதன்கிழமை) காலவரையற்றவேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக மாணவர்களும்போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

தம்பிதுரை முயற்சி தோல்வி:

இதற்கிடையே தமிழக கல்வி அமைச்சர் தம்பித்துரை மற்றும் கல்வி அதிகாரிகள் அரசுக் கல்லூரிஆசிரியர்களுடன் பேச்சு நடத்தி போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர்.

ஆனால் அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாளை முதல்கட்டாயம் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கல்லூரி ஆசிரியர்கள்கூறிவிட்டனர்.

ஜெ. வேண்டுகோள்:

ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளின் போராட்டம் குறித்து இன்று தம்பித்துரை மற்றும் கல்வித்துறைஅதிகாரிகளுடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில் போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கையிஸ், அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைப்பதால் அவற்றில் பணிபுரியும்ஆசிரியர்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்பட மாட்டார்கள்.

அவர்களுக்கு எந்த இழப்பும் ஏற்படாது. ஆசிரியர்களின் நலன் தொடர்ந்து பாதுகாக்கப்படும்.

மேலும் பல்கலைக்கழகங்களுடன் கல்லூரிகளை இணைப்பதால் மாணவர்களின் கல்வித் தரமும் உயரும். எனவேஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+