இன்று ராஜிவ் பிறந்த நாள்: அமைச்சர்கள் நல்லிணக்க உறுதிமொழி எடுத்தனர்
சென்னை:
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 58வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
ராஜிவின் பிறந்த நாள் நல்லிணக்க நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது.
தமிழக தலைமைச் செயலகத்தில் ராஜிவின் உருவப் படத்திற்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மலரஞ்சலிசெலுத்தினர்.
பின்னர் பொதுப்பணித்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் அனைத்து அமைச்சர்களும் அதிகாரிகளும்நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பன்னீர்செல்வம் உறுதிமொழியை வாசிக்க மற்றவர்கள் அதைத்திருப்பி வாசித்தனர்.
இதே போல் காங்கிரஸ் உறுப்பினர்களும் இன்று ராஜிவ் பிறந்த நாளைக் கொண்டாடினர்.
சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் அலுவலகத்தில் ராஜிவின் படத்திற்கு குமரி அனந்தன், வாழப்பாடிராமமூர்த்தி உள்ளிட்ட பல தலைவர்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதே போல் தமிழகத்தில் உள்ள அனைத்து காங்கிரஸ் அலுவலகங்களிலும் ராஜிவ் பிறந்த நாள் விழாகொண்டாடப்பட்டது.
டெல்லியில்...
இதற்கிடையே டெல்லியில் ராஜிவின் நினைவிடத்தில் அவருடைய மனைவியும் காங்கிரஸ் தலைவருமானசோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி செய்தார்.
ராஜிவ் நினைவிடத்தில் பக்திப் பாடல்கள் பாடப்பட்டன. நல்லிணக்க உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டது.
மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராஜிவுக்கு அஞ்சலிசெலுத்தினர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications