எய்ட்ஸ் நோயாளிகளுக்கு தடை விதித்த கிராமம்
கோவை:
கோவை மாவட்டம் தேவராயபுரம் என்ற கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள எய்ட்ஸ் நோயாளிகள் பராமரிப்புமையத்தால் அங்கு பெரும் பிரச்சனை வெடித்துள்ளது.
இந்த நோயாளிகளுக்கு உணவுப் பொருள் கொடுக்கவும், ஊருக்குள் நடமாடவும் கிராம மக்கள் தடைவிதித்துள்ளதால் ஏராளமான எய்ட்ஸ் நோயாளிகள் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தேவராயபுரத்தில் அரசு சார்பில் எய்ட்ஸ் நோயாளிகள் பராமரிப்பு மையம் உள்ளது. இங்கு எய்ட்ஸ் நோயாளிகள்தங்க வைக்கப்பட்டு சிகிச்சையும், மரண பயத்தில் இருந்து மீள்வதற்காக மன பலம் பெறுவதற்கான பயிற்சிகளும்தரப்படுகின்றன.
இந்த மையத்தைச் சேர்ந்த நோயாளிகள் ஊருக்குள் சுதந்திரமாக சுற்றி வந்தார்கள். கடைகளில் உணவுப்பொருட்களை வாங்கிக் கொள்வது, சலூன்களில் சவரம் செய்து கொள்வது என பிற மக்களைப் போல இயல்பாகவாழ்ந்து வந்தனர்.
ஆனால், இப்போது அதற்கு தடை வந்து விட்டது.
இந்த எய்ட்ஸ் நோயாளிகளால் தங்களுக்கும் எய்ட்ஸ் பரவி விடும் என்று அச்சமடைந்துள்ள ஊர் மக்கள்அவர்களை ஊருக்குள் நடமாட விடாமல் தடுத்து வருகின்றனர்.
கடைகளில் உணவுப் பொருட்கள் கொடுக்கக் கூடாது, சலூன் கடைகளில் இவர்களுக்கு சவரம் செய்யக் கூடாதுபோன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். மேலும் ஊருக்குள் நடமாடவும் கூட எய்ட்ஸ் நோயாளிகளுக்குத் தடைவிதித்துள்ளனர்.
மேலும், இந்த மையத்தை உடனடியாக இங்கிருந்து வேறு இடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அந்தகிராம மக்கள் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கிராம மக்கள் மனுவும் அனுப்பியுள்ளனர்.
கிராம மக்களின் இந்த திடீர் எதிர்ப்பால் மனமுடைந்து போயுள்ள எய்ட்ஸ் நோயாளிகள் மனரீதியாகபாதிக்கப்பட்டுள்ளனர்.
எஸ்ட்ஸ் நோயாளிகள் குடித்த டம்ளரில் நாமும் டீ குடித்தால் நமக்கும் அந்த நோய் வந்துவிடும் என்பது போன்றஅறியாமை காரணமாக கிராம மக்கள் இவர்களை ஒதுக்க ஆரம்பித்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications