பாபா வன்முறை: தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை:
பாபா படம் தொடர்பாக தமிழகத்தில் நடந்த வன்முறைகள் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டவழக்கில் 3 வாரத்தில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாபா படத்தைப் பார்க்கக் கூடாது என்று தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் இந்தப் படம் வெளியிடப்பட்ட தியேட்டர்களில்நடந்த கலவரத்துக் காரணமானவர்களை தண்டிக்கக் கோரியும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் சூர்யப் பிரகாசம் இந்த மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி கோவிந்தராஜன்ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இதனை விசாரித்தது.
தமிழக அரசின் உள்துறைச் செயலாளர், காவல்துறை டி.ஜி.பி. ஆகியோர் இந்த வழக்குக்கு 3 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இது தொடர்பான நோட்டீஸ்கள் இந்த இருவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக வழக்கறிஞர் சூர்யப் பிரகாசம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
பாபா படத்தைப் பார்க்கக் கூடாது என்று வன்முறை மூலம் மக்களிடையே சிலர் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளனர். இது மக்களின்அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. ஆனால், இதை தமிழக அரசும் போலீசாரும் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர்.
இது வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையாகக் கருதி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது மக்களின் அடிப்படை உரிமைதொடர்பான பிரச்சனையாகும்.
ரஜினிகாந்த் குறித்து பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாசுக்கு தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால், அவரது பேச்சுவன்முறையத் தூண்டிவிட்டுள்ளது. படப் பெட்டிகள் கடத்தப்படுகின்றன.
ஆனால், இதை அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. இந்த சமூக விரோத சக்திகள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துள்ளன. பா.ம.கவின் இச்செயல் மக்களின் ஜனநாயக உரிமையை பறிக்கும் செயலாகும். இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்என்று கூறப்பட்டிருந்தது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications