திமுகவில் வலுக்கிறது கோஷ்டிப் பூசல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுகவில் கோஷ்டிப் பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக அழகிரிக்கு எதிராக திமுக தலைவர்கள் குரல் எழுப்பத்தொடங்கியுள்ளனர்.

அழகிரியை கருணாநிதி அடக்கி வைக்காவிட்டால் கட்சியை விட்டே விலகிவிடுவேன் என முன்னாள் சபாநாகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் எச்சரித்துள்ளார்.

ஆனால், பழனிவேல் ராஜன் கட்சியை விட்டு விலகுவதாகக் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது என கருணாநிதி கூறியுள்ளார்.கருணாநிதியின் இந்தப் பேச்சு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக உள்ளதாக அழகிரி எதிர்ப்பாளர்கள் மேலும் கடுப்படைந்துள்ளனர்.

திமுகவில் அழகிரி- ஸ்டாலின் மோதல் முற்றியபோது அழகிரியை மதுரைக்கு பேக்-அப் செய்தார் திமுக தலைவர் கருணாநிதி. மதுரையில்இருந்தவண்ணம் தொழில்களில் ஈடுபடுமாறு அவருக்கு அறிவுறுத்தி அதற்கான உதவிகளையும் செய்தார் கருணாநிதி.

இதையடுத்து 12 ஆண்டுகளுக்கு முன் மதுரைக்கு வந்த அழகிரி முதலில் பல்வேறு தொழில்களைத் தொடங்கினார். பெரும் அளவில் பணம்ஈட்டிய அழகிரிக்கு மதுரையில் ஏகப்பட்ட சொத்துக்கள் உள்ளன. திமுக ஆட்சியில் இருந்தபோது அவரது சொத்து பல மடங்கானது.

Karunanidhiமதுரை கண்ட்ரோல்...

அதே நேரத்தில் தனது அரசியல் ஆர்வத்தையும் விடவில்லை. மதுரை மாவட்ட திமுகவில் தனக்கென ஒரு கோஷ்டியை உருவாக்கினார்.பின்னர் ஒட்டுமொத்த மதுரை திமுகவை தனது கண்ட்ரோலில் கொண்டு வந்தார்.

இதைத் தொடர்ந்து தென் மாவட்ட திமுகவையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சிகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார்.இதில் நெல்லை, தூத்துக்குடி, அருப்புக்கோட்டை போன்ற பகுதிகளில் அழகிரிக்கு என கோஷ்டி உருவாகிவிட்டது.

ஆனால், அவருடன் இருக்கும் கோஷ்டியில் மூத்த தலைவர்கள் யாரும் இல்லை. கீழ்மட்டத் தொண்டர்களை தன் பக்கம் வைத்துக் கொண்டுஅந்தந்த மாவட்டங்களில் உள்ள திமுக தலைவர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.

அழகிரியால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது மதுரை மாவட்ட திமுக தான். இங்கு சட்டமன்றத் தேர்தலில் இருந்து கவுன்சிலர் தேர்தல் வரைஅழகிரியின் தலையீடு இருந்து வருகிறது. தொண்டர்களில் பெரும்பான்மையினரை தன் பக்கம் வைத்துள்ள இவர் ஸ்டாலினுக்கு ஆதரவானதலைவர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.

அழகிரி- ஸ்டாலின் மோதல் தீவிரம் ஆகும்போதெல்லாம் ஸ்டாலினுக்கு ஆதரவான நிலையை எடுத்து வருகிறார் கருணாநிதி. ஆனால்,அழகிரியை தட்டி வைக்க கருணாநிதி தவறி வருகிறார்.

ஒரு கட்டத்தில் நிலைமை மிக மோசமான போது அழகிரியை கட்சியைவிட்டு ஒதுக்கி வைப்பதாக கருணாநிதி அறிவித்தார். ஆனால்,மீண்டும் அவரை கட்சியில் சேர்த்தார். அதன பின்னர் அழகிரியின் தலையீடு கட்சியில் மிகவும் அதிகமாகிவிட்டது. கட்சியின் தலைவர்களைஅவர் அவமதிப்பதும் அதிகரித்து வருகிறது.

ஸ்டாலினை புறக்கணித்த திமுகவினர்..

Palani Vel Rajanசமீபத்தில் மதுரையில் நடந்த திமுக கஞ்சி வழங்கும் விழாவில் ஸ்டாலின் கலந்து கொள்ள இருந்தார். அதனால் அந்தக் கூட்டத்தைப்புறக்கணிக்குமாறு தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இதனால் கூட்டமே இல்லாத அந்த திமுக கூட்டத்தில் அதிமுகவினரும் போலீசாரும் நுழைந்து கண்மூடித்தனமாகத் தாக்கினர்.

இதில் முன்னாள் அமைச்சர் கிருட்டிணன் உள்பட பலர் ரத்தக் காயம் அடைந்தனர். முன்னாள் சபாநாயகர் பழனிவேல் ராஜன் உள்ளிட்டமூத்த திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

ஆனால், இந்தக் கைதை எதிர்த்து மாநிலம் முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்தியபோதும் கூட மதுரையில் போராட்டம்நடக்கவில்லை. காரணம்- அழகிரி.

இந்தத் தலைவர்களுக்கு ஆதரவாக எந்தப் போராட்டமும் நடத்தக் கூடாது என திமுகவினருக்கு அழகிரி உத்தரவிட்டுவிட்டதாகத் தெரிகிறது.இதனால் கண்டுகொள்ள யாரும் இல்லாமல் சிறையில் இருந்தனர் 96 திமுகவினர்.

இதனால் வெறுத்துப் போய் உள்ள திமுக தலைவர்கள் அழகிரிக்கு எதிராக மனம் குமுறிக் கொண்டுள்ளனர். ஆனால், கருணாநிதியின்ஆதரவு அழகிரிக்கு இருப்பதால் தங்கள் எதிர்ப்பை வெளிப்படையாகக் காட்டாமல் இருந்து வருகின்றனர்.

இரு கோஷ்டி கொண்ட குழு...

மதுரையில் உள்ள 3 மாவட்ட திமுக தலைவர்களும் நிர்வாகிகளும் அழகிரி பிரிவு, ஸ்டாலின் பிரிவு என பிரிந்து நிற்கின்றனர். இதனால்கட்சியின் செயல்பாடு இந்த மாவட்டத்தில் முழு அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஸ்டாலினுக்கும் கருணாநிதிக்கும் மோதல்உண்டாகியுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து அந்த மூன்று மாவட்ட நிர்வாகக் குழுக்களையும் கலைத்துவிட கருணாநிதிதிட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

Alagiriநிர்வாகக் குழுவை கலைத்துவிட்டு மதுரை மாவட்ட திமுகவில் ஒரு குழுவை உருவாக்கவும் அதில் அழகிரி, ஸ்டாலின் ஆகியோரதுஆதரவாளர்களை சம அளவில் நியமிக்கவும் கருணாநிதி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கட்சித் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகளைக் கலைத்துவிட்டு தனது இரு மகன்களின் ஆதரவாளர்களைநிர்வாகிகளாக நியமித்து கட்சியின் ஜனநாயகத்தை கருணாநிதியே கேலிக்குறியாக்கியுள்ளதாக மதுரை மாவட்ட திமுகவினர் இடையேஅதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருணாநிதியின் இத் திட்டத்தை மிகக் கடுமையாக எதிர்க்க ஆரம்பித்துள்ளார் பழனிவேல் ராஜன்.

அழகிரியை கருணாநிதி அடக்கி வைக்காவிட்டால் கட்சியை விட்டு விலகிவிடப் போவதாக பழனிவேல்ராஜன் அறிவித்துள்ளார். கஞ்சித்தொட்டி விவகாரத்தில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் பழனிவேல்ராஜனும் மேலும் 95 திமுகவினரும் சிறையில் இருந்து நேற்று முன் தினம்தான் வெளியில் வந்தனர்.

பி.டி.ஆர். பேட்டி:

இவர்கள் அனைவரும் தேனியில் தங்கியிருக்க வேண்டும் எனவும் தினமும் காவல் நிலையத்தில் வந்து கையெழுத்திட வேண்டும் என்றும்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்காக நேற்று இவர்கள் அனைவரும் தேனி எஸ்.பி. அலுவலகம் வந்து கையெழுத்திட்டனர்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய பழனிவேல் ராஜன் கூறியதாவது:

கஞ்சித் தொட்டி பிரச்சனையில் சிறையில் இருந்த எங்களைப் பார்க்க மதுரை திமுகவினர் யாரும் வரவில்லை. இதற்குக் காரணம் அழகிரிதான். பொன் முத்துராமலிங்கம் கூட சிறைக்கு வந்து எங்களைச் சந்திக்கவில்லை. கஞ்சித் தொட்டி விழாவுக்கும் முத்துராமலிங்கமும்அழகிரியும் வரவில்லை. இவர்கள் திமுகவில் தானே இருக்கிறார்கள்?.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் 15 தொகுதிகளில் திமுக தோல்வியடைந்ததற்கு அழகிரி தான் காரணம். திமுகவினரைகட்சி வேலை செய்ய விடாமல் அவர் தடுத்துவிட்டார். எங்களுக்கு எதிராக வேலை பார்க்க உத்தரவிட்டு தோற்கடித்தார். மாநகராட்சித்தேர்தலில் தனது ஆதரவாளர்களுக்கு மட்டும் திமுகவினரை வேலை பார்க்க வைத்துவிட்டு மற்ற இடங்களில் திமுகவினரையே தோற்கச்செய்ய வேலை பார்த்தார்.

எங்களைத் தோற்கச் செய்வதற்காக பெரும் அளவில் பணத்தை செலவழித்தார் அழகிரி. அழகிரிக்கு இந்தப் பணம் ஏது?

மதுரையில் உள்ள 3 மாவட்டச் செயலாளர்களையும் அழகிரியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு கட்சித் தலைமை ஒதுக்கி வருகிறது. இதுகட்சிக்கு நல்லதல்ல.

அழகிரியுடன் இனிமேல் சமரசம் எல்லாம் கிடையாது. அவருடன் தான் இணைந்து செயல்பட வேணடும் என்று கட்சி மேலிடம்உத்தரவிட்டால் கட்சியை விட்டு விலகவும் தயார். நான் மட்டுமல்ல மதுரை மேயர் செ.ராமச்சந்திரன் கூட அழகிரியால் மிகவும்அவமதிக்கப்பட்டு வருகிறார். அவரும் கூட கட்சியை விட்டு விலகி விடும் மூடில் தான் உள்ளார்.

அழகிரியை ஏற்க முடியாது:

மதுரை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தென் மாவட்ட திமுகவினரும் அழகிரியால் மிகவும் நொந்து போய் உள்ளனர். தேனி மாவட்டச்செயலாளர் மூக்கையாவை திமுகவினர் சந்திக்கக் கூடாது என்று கூட அழகிரி உத்தரவிட்டிருப்பதாகத் தெரிகிறது. அவர் விரைவில் கட்சியைவிட்டு ஓடும் முடிவில் இருக்கிறார்.

தென் மாவட்ட திமுகவினர் ஸ்டாலின் தலைமையை ஏற்கத் தயார். ஆனால், ஒரு காலத்திலும் எந்தக் காரணத்துக்காகவும அழகிரியைப்போய் தலைவராக ஏற்க மாட்டோம்.

மதுரையில் ஸ்டாலின் ஆதரவாளர்களாக உள்ள

Stalinஅழகிரியை நான் எதிர்ப்பதால் என்னை கட்சியை விட்டு தலைமை நீக்கினால் கவலையில்லை. எனது ஆதரவாளர்களுடன் கட்சியை விட்டுவெளியேறிவிட நான் தயார் என்றார் பழனிவேல் ராஜன்.

கருணாநிதிக்கு மிக நெருக்கமான, மதுரையின் மிகப் பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த பழனிவேல் ராஜனையே அழகிரி இந்தப்பாடுபடுத்தியிருக்கிறார் என்றால் மற்ற திமுக தலைவர்கள் குறித்து சொல்லவே தேவையில்லை.

ஆனால், தனது மூத்த மகனால் மூத்த திமுக தலைவர்கள் மனம் வெதும்பிப் போய் உள்ளதை திமுக தலைவர் கருணாநிதிகண்டுகொண்டதாய் தெரியவில்லை.

அழகிரிக்கு மீண்டும் கருணாநிதி ஆதரவு:

இன்று அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி,

திமுகவில் உட்கட்சித் தேர்தல் மிக சுமூகமாக நடந்து வருகிறது. சிலர் கட்சிக்கு எதிராக குரல் எழுப்பினாலும் கட்சி கட்டுக் கோப்புடன்இருக்கிறது. நான் நீண்ட நாட்கள் கட்சியின் தலைவராக இருக்க முடியாது. இதனால் தான் இளைஞர்களிடம் கட்சியை ஒப்படைக்கவேண்டும் என்று கூறி வருகிறேன். இதனால் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன் என்று அர்த்தமல்ல.

மதுரை திமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து பின்னர் யோசிக்கப்படும். இந்தப் பிரச்சனை தானாகவே ஓய்ந்துவிடும். மதுரை மாவட்டதிமுகவை நிர்வகிக்க அனைத்துப் பிரிவினரையும் கொண்ட குழு அமைப்பதை பழனிவேல் ராஜன் எதிர்க்கிறார். இதன்மூலம் கட்சியின்ஒற்றுமையை அவர் விரும்பவில்லை என்று தானே அர்த்தம். மூத்த தலைவரான பழனிவேல் ராஜன் தனது ஆதரவாளர்களுடன் கட்சியைவிட்டு வெளியேறப் போவதாகக் கூறுவது வேடிக்கையாக உள்ளது என்றார் கருணாநிதி.

கட்சியின் நலனுக்காக சிறை சென்றவர்களை அவமதித்த அழகிரியைக் கண்டிக்காமல் தவறுகளைச் சுட்டிக் காட்டிய பழனிவேல் ராஜனையேகருணாநிதி கிண்டலடித்திருப்பது அவரது ஆட்களையும் அழகிரி எதிர்ப்பாளர்களையும் எரிச்சல்படுத்தியுள்ளது.

மதுரை vs சென்னை:

தனக்கு எதிராகப் பேசிய பழனிவேல் ராஜனையும் அவருக்கு ஆதரவான திமுக தலைவர்களையும் நீக்க கருணாநிதியுடன் அழகிரி நிச்சயம்வலியுறுத்துவார் என அவரது ஆதரவாளர்கள் மதுரையில் நம்மிடம் கூறினர். அப்படி ஒரு நிலை ஏற்பட அனுமதிக்க மாட்டோம் எனஸ்டாலின் ஆதரவாளர்கள் சென்னையில் கூறுகின்றனர்.

திமுகவில் கருணாநிதியின் மகன்களின் கோஷ்டிப் பூசல் உச்ச கட்டத்தை எட்டி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+