அரபு நாடுகளில் வேலையா?: ஏஜெண்டுகள் தரும் சூட்கேசை வாங்க வேண்டாம்
சென்னை:
அரபு நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் செல்லும் ஏஜென்டுகள் அப்பாவி இளைஞர்களின் சூட்கேஸ்கள் மற்றும்ஷூக்களில் போதைப் பொருள்களை மறைத்து வைத்து கடத்துவதால் மிக எச்சரிக்கையாக இருக்கும்படி தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வளைகுடா நாடுகளில் வேலைக்கு ஆள் அனுப்பும் ஏஜெண்டுகள் அவர்களை முறைகேடாகப் பயன்படுத்துகின்றனர். வேலைக்காகவளைகுடா நாடுகளுக்குச் செல்பவர்ளுக்குத் தெரியாமலலேயே அவர்கது பெட்டிகளில் போதைப் பொருள்கள் வைக்கப்படுகின்றன.
மேலும் வளைகுடா நாடுகளில் வேலைக்கு ஏற்பாடு செய்யும் தமிழக ஏஜெண்டுகள் குறிப்பிட்ட இடத்தில் தான் ஷூ வாங்க வேண்டும்,சூட்கேஸ் வாங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். அவ்வாறு வாங்கும் பெட்டிகளிலும் ஷூக்களிலும் போதைப் பொருள்கள் மறைத்துவைக்கப்படுகின்றன.
இதனால் இந்த அப்பாவிகள் வளைகுடா நாடுகளில் கால் வைத்த உடனேயே அந் நாட்டு அதிகாரிகளின் சோதனைகளில் சிக்கினால் கைதுசெய்யப்படுகிறார்கள். கொடூர தண்டனைகளை அனுபவிக்கின்றனர்.
இதனால் வளைகுடாவுக்கு வேலைக்குச் செல்பவர்கள் இது போன்ற மோசடி ஏஜெண்டுகளிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனதமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications