பேச்சுவார்த்தை: பாக். கோரிக்கையை நிராகரித்தது இந்தியா
காத்மாண்டு:
தங்களுடன் பேச்சு நடத்த வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை இந்தியா மீண்டும் நிராகரித்துவிட்டது.
நேபாளத் தலைநகர் காத்மாண்டு இன்று தொடங்கிய சார்க் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியவெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அங்கு சென்றுள்ளார்.
அதே போல பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் இனாமுல் ஹக்கும் நேபாளம் வந்துள்ளார். மாநாட்டு அரங்கில்சின்ஹாவும் ஹக்கும் கைகுலுக்கிக் கொண்டனர். இந்திய- பாகிஸ்தான் பதற்றம் உச்ச நிலையை அடைந்த பின்னர் இரு நாட்டுஅமைச்சர்களும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து கை குலுக்குவது இதுவே முதல்முறையாகும்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய ஹக், காஷ்மீர் விவகாரம் குறித்து பேச்சு நடத்த இந்தியா முன் வர வேண்டும், எந்தவிதமான நிபந்தனையும்இல்லாமல் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயார் என்றார்.
இதற்கு சின்ஹா பதிலளிக்கையில், இன்றும் காஷ்மீருக்குள் தீவிரவாதிகள் ஊடுருவிக் கொண்டு தான் இருக்கின்றனர். அதை முதலில்பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் தடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு சும்மா பேச்சுவார்தக்கு பாகிஸ்தான் அலையக் கூடாது.தீவிரவாதிகள் ஊடுருவல் நிற்காதவரை பாகிஸ்தானுடன் பேசவே மாட்டோம். இதில் இந்தியா மிக மிகத் தெளிவாக உள்ளது.
அவரால் தீவிரவாதிகளைத் தடுக்க முடியாவிட்டால் அதையாவது முஷாரப் தெளிவாக வெளியில் சொல்ல வேண்டும். அதை அவர்தெளிவாக்கினால் வேறு ஏதாவது வழியில் தீவிரவாதிகளைத் தடுப்பது குறித்தாவது யோசிக்கலாம்.
நான் பாகிஸ்தான் அமைச்சருடன் கை குலுக்கியது ஒரு மரியாதைக்காகத் தான். அது தான் இந்தியாவின் பண்பு. இதற்கு மேல் இந்தக் கைகுலுக்கலுக்கு எந்த அர்த்தமும் கற்பித்துவிட வேண்டாம் என்றார் சின்ஹா.
தீவிரவாதிகள் விவகாரம்: முஷாரப் ஒப்புதல்
இரு தினங்களுக்கு முன் ஒரு பத்திரிக்கைக்கு பேட்டியளித்த முஷாரப், சில தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி வருவது உண்மையாகஇருக்கலாம். நாங்கள் எவ்வளவோ கட்டுப்படுத்தியும் கூட சில அமைப்புகள் இந்தியாவுக்குள் ஊடுருவுகின்றன. ஆனால், அரசும்,ராணுவமும் தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்பியது எல்லாம் நிறுத்தப்பட்டுவிட்டது என்றார்.
தீவிரவாதிகளை அரசோ, ராணுவமோ இந்தியாவுக்குள் அனுப்பியதே இல்லை என்று தான் இதுவரை முஷாரப் கூறி வந்தார். இப்போதுதான் முதன்முறையாக அதை அரசு நிறுத்திவிட்டதாகக் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிருக்குப் பயந்து...
பாகிஸ்தானில் தீவிரவாதிகளும் ஐ.எஸ்.ஐயும் முஷாரபின் உயிருக்கே குறி வைத்திருப்பதாகத் தெரிகிறது. அமெரிக்க புலனாய்வுப் பிரிவின்யோசனைப்படி அவர் தனது வெளியுலக நடமாட்டத்தை பெருமளவு குறைத்துக் கொண்டுவிட்டார்.
இதனால் கடந்த 14ம் தேதி தனது நாட்டின் சுதந்திர தினத்தன்று கொடியை மைதானத்தில் சென்று ஏற்றாமல் தனது வீட்டின் ஒருஅறையிலேயே முஷாரப் ஏற்றினார். அவர் வெளியில் வருவதை கடந்த சில வாரங்களாக குறைத்துக் கொண்டுள்ளார்.
வினை விதைத்தவன்... என்ற பழமொழிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக முஷாரப் நிலையை சொல்லலாம்.
9 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை:
இந் நிலையில் இன்று அதிகாலை காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளை இந்திய ராணுவம் விரட்டிச் சென்று தாக்கியது. இதில் 9தீவிரவாதிகள் எல்லைப் பகுதியிலேயே உயிரிழந்தனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications