பெண் காவலர்களிடம் செக்ஸ் தொல்லை: திருவள்ளூர் எஸ்.பி. சஸ்பெண்ட்
சென்னை:
பெண் டிஎஸ்பிக்களிடம் முறைகேடாக நடந்ததற்காகவும், பொதுமக்களிடம் லஞ்சம் கேட்டு மிரட்டியதற்காகவும்திருவள்ளூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி, தேனி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் முன்பு எஸ்.பியாக இருந்தவர் ராஜேஷ் தாஸ்.
அப்போதும் பல பெண் சப் இன்ஸ்பெக்டர்கள், பெண் டிஎஸ்பிக்கள், பெண் காவலர்களிடம் செக்ஸ் தொல்லை தந்துவந்தார். மேலும் தனக்குக் கீழ் உள்ள காவலர்களை அவர் அடித்ததாகவும் கூட புகார்கள் வந்தன.
அவர் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாக இருந்தபோது ஒரு பெண் காவலரை கையைப் பிடித்து இழுத்துபலவந்தப்படுத்த முயன்றார். ஆனால், அப்போது இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அதற்குப் பதிலாக தமிழ்நாடு சிறப்புக் காவல் படையின் பெண்கள் பிரிவு தூத்துக்குடியில் இருந்து ஒட்டுமொத்தமாகதிருநெல்வேலிக்கு மாற்றப்பட்டது.
இந் நிலையில் சமீபத்தில் அவர் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பியாக பொறுப்பேற்றார். திருத்தணி அருகே துப்பாக்கிச்சுடும் கேந்திரம் அமைப்பதற்காக பொதுமக்களிடம் கட்டாய பண வசூலில் ஈடுபடுமாறு போலீசாருக்கு இவர்உத்தரவிட்டதாகத் தெரிகிறது. இதனால் அந்தப் பகுதி மக்கள் அரசுக்கு புகார்களை அனுப்பினர்.
இந் நிலையில் செங்கல்பட்டு சரகத்தைச் சேர்ந்த இரண்டு பெண் டி.எஸ்.பிக்களிடம் ராஜேஷ் தாஸ் தவறாக நடக்கமுயன்றுள்ளார்.
இந்த பெண் டிஎஸ்பிக்களிடம் ராஜேஷ் தாஸ் செக்ஸ்ரீதியில் தொல்லை தந்தது குறித்து ஐஜி திலகவதி விசாரணைநடத்தினார்.
இதைத் தொடர்ந்து ராஜேஷ் தாஸை சஸ்பெண்ட் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications