தமிழகம் முழுவதும் அரசுக் கல்லூரிகள் ஸ்தம்பிப்பு
சென்னை:
தமிழகம் முழுவதும் இன்று முதல் அரசுக் கல்லூரி ஆசியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அவர்களுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் 463 கல்லூரிகள் உள்ளன. இதில் அரசுக் கல்லூரிகளின் எண்ணிக்கை 67. இந்தக் கல்லூரிகளைபல்கலைக்கழகங்களுடன் இணைத்துவிட முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளனர்.
இதனால் தங்களது பல சலுகைகள் பறிபோகும் என்பதால் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசின்இந்தத் திட்டத்தால் கல்விக் கட்டணம் உயரும், உதவித் தொகை போன்றவற்றை இழக்க வேண்டி வரும் என்பதால்மாணவ, மாணவிகளும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இதுவரை பல கட்டப் போராட்டம் நடத்தி வந்த ஆசிரியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைஆசிரியர்கள் தொடங்கியுள்ளனர்.
சென்னை நந்தனம் கல்லூரி, காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி, மாநிலக் கல்லூரி, ராணி மேரிக் கல்லூரி, பாரதிகலைக் கல்லூரி, மதுரை மீனாட்சிக் கல்லூரி, திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரி, தஞ்சை குந்தவை நாச்சியார் அரசுக் கல்லூரி,கோவை அரசுக் கல்லூரி உள்பட 67 அரசுக் கல்லூரிகளின் ஆசிரியர்களும் இன்று முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கல்லூரியின் வெளியே இந்த ஆசிரியர்கள் தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களும்வகுப்புக்களைப் புறக்கணித்துவிட்டு சாலை மறியல், தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அரசுக் கல்லூரிகளில் வகுப்புகள் ஏதும் நடக்கவில்லை. வேலை நிறுத்தத்தைத் தடுக்க நேற்று கல்விஅமைச்சர் தம்பிதுரை பல்கலைக்கழகத் துணை வேந்தர்களுடன் பேச்சு நடத்தினார். அதே போல கல்வித்துறைச்செயலாளரும் ஆசிரியர் சங்கக் கூட்டணியுடன் பேச்சு நடத்தினார்.
ஆனால், இதனால் எந்தப் பலனும் ஏற்படவில்லை. இதையடுத்து இன்று முதல் ஆசிரியர்கள் தங்கள்போராட்டத்தைத் துவக்கி விட்டனர்.
எதிர்க் கட்சிகள் தூண்டுகின்றன: ஜெ.
இந் நிலையில் ஆசிரியர்களின் போராட்டத்தை எதிர்க் கட்சிகள் தூண்டிவிட்டு வருவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இன்று கோட்டையில் நிருபர்களிடம்பேசிய அவர், ஆசிரியர்களின் போராட்டத்துக்கு எந்தவிதமான அடிப்படையும் இல்லை.
அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதால் ஆசிரியர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. ஆனால், என் மீது தனிப்பட்ட விரோதம்காரணமாக அரசின் எல்லா நல்ல திட்டங்களையும் எதிர்க் கட்சிகள் எதிர்த்து வருகின்றன. இந்த ஆசிரியர்கள் போராட்டத்தை திமுக, பா.ம.க., கம்யூனிஸ்ட்கட்சிகள் தான் வேண்டுமென்றே தூண்டிவிட்டு வருகின்றன என்றார்.
கருணாநிதி ஆதரவு:
ஆசிரியர்களின் போராட்டத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அறிவாலயத்தில் நிருபர்களிடம் பேசிய அவர், ஆசிரியர்கள், மாணவர்களின் கருத்துத் தான் எனது கருத்தும் என்றார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications