தமிழ்நாடா? தனிநாடா?: ஜெயாவுக்கு தலைமை நீதிபதி கேள்வி
சென்னை:
தமிழ்நாட்டை முதல்வர் ஜெயலலிதா தனி நாடாகக் கருதிக் கொண்டிருக்கிறாரா என்று கோபத்துடன் கேள்வி எழுப்பினார்சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி.
இதுவரை தனது நிர்வாகத்தில் இருந்த அதிகாரிகளைத் தான் ஜெயலலிதா வார்த்தைகளால் அர்சித்து வந்தார். பின்னர் தேர்தல்கமிஷனை குறை கூறிப் பேசிய அவர் இப்போது நீதித்துறையுடனும் மோத ஆரம்பித்துள்ளார்.
சாட்டையால் அடித்து தான் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை வேலை வாங்க வேண்டி உள்ளது என்று கூறி நியாயமான அதிகாரிகளின்மனதை நோகடித்தார் ஜெலலிதா.
நேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் லிங்டோவுக்கும் கண்டனம் தெரிவித்தார். குஜராத்தில் நியாயாமான தேர்தல் நடத்தும்சூழ்நிலை இல்லை, அங்கு தேர்தலை ஒத்தி வைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமலாக்க வேண்டும் என்று கூறிய லிங்டோவைதிட்டித் தீர்த்தார்.
புறக்கணிக்கப்பட்ட நீதித்துறை:
இந் நிலையில் உயர் நீதிமன்றத்தையும் மதிக்காமல் புதிய உத்தரவு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அரசின் இந்தஉத்தரவுக்கு தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக நீதிமன்றங்களில் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளின் கட்டணங்களை அரசு திடீரென 20 முதல் 30 மடங்கு வரைஉயர்த்தியுள்ளது. ஆனால், இது குறித்து தலைமை நீதிபதியுடன் கூட விவாதிக்கவில்லை.
இதற்கான அரசு ஆணை கடந்த 8ம் தேதியே தயராகிவிட்டதாகத் தெரிகிறது. ஆனால், இது குறித்து வெளியில் கூறாமல் இருந்துவந்த அரசு நேற்று திடீரென கட்டண உயர்வு குறித்த உத்தரவைப் பிறப்பித்தது.
மறைக்கப்பட்ட அரசு ஆணை:
கட்டண உயர்வு குறித்து பொது மக்களுடன் சேர்த்து தலைமை நீதிபதிக்கே நேற்று தான் தெரியவந்தது.
இந்த திடீர் கட்டண உயர்வை எதிர்த்து ராஜகோபால், கதிரேசன் ஆகிய இரு வழக்கறிஞர்கள் இன்று உயர் நீதிமன்றத்தில் அவசரபொது நல வழக்கைத் தொடர்ந்தனர். இதனை இன்று பிற்பகலியேயே விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தலைமை நீதிபதிசுபாஷன் ரெட்டி தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
நீதிபதி சுபாஷன் ரெட்டி தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் இதனை விசாரித்தது. அப்போது சுபாஷன் ரெட்டி கூறியதாவது:
தமிழக அரசு தமிழ்நாட்டை தனி நாடாக நினைத்துக் கொண்டிருக்கிறதா? உயர் நீதிமன்றத்துடன் கூட கட்டணம் குறித்துஆலோசிக்க முடியாதா? நீதித்துறையின் நேர்மையை தமிழக அரசு சந்தேகிக்கிறதா? எங்களிடம் விவாதிக்காமல் புறக்கணித்ததுஏன்?
மற்ற மாநிலங்களுடன் இந்தக் கட்டணம் குறித்து தமிழக அரசு ஒப்பிட்டுப் பார்த்ததா? கடந்த 8 தேதியே அரசு ஆணையை தயார்செய்துவிட்டு எங்களிடம் இருந்து மறைத்தது ஏன்?
இவ்வாறு சரமாரியாகக் கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி ஒரு வாரத்துக்குள் இந்தக் கேள்விகளுக்கு தமிழக அரசு பதில்சொல்லியாக வேண்டும் என்று கூறி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications