ரகுபதி வீட்டில் சிக்கிய 600 பவுன் தங்கம்: நீதிமன்றத்தில் ஒப்படைப்பு
புதுக்கோட்டை:
முன்னாள் அமைச்சர் ரகுபதியின் வீட்டிலும் வங்கி லாக்கர்களிலும் கைப்பற்றப்பட்ட தங்க-வைர நகைகள்,வெள்ளிப் பாத்திரங்கள் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் புதுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில்ஒப்படைக்கப்பட்டன.
முன்னாள் திமுக அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், ஜெனிபர் சந்திரன், அதிமுக அமைச்சராக இருந்து பின்னர்திமுகவுக்குத் தாவிய ரகுபதி மற்றும் எம்.எல்.ஏவான ரங்கநாதன் ஆகியோரின் வீடுகளில் சமீபத்தில் லஞ்ச ஒழிப்புபோலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
புதுக்கோட்டையில் உள்ள ரகுபதியின் வீட்டிலும் வங்கி லாக்கர்களிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.இதில் அவருடைய வருமானத்தை மீறிச் சேர்க்கப்பட்டதாகக் கருதப்படும் ஏராளமான தங்க-வைர நகைகள்,வெள்ளிப் பாத்திரங்கள் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை கைப்பற்றப்பட்ட பொருட்களை போலீசார் புதுக்கோட்டைநீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். ஒப்படைக்கப்பட்ட பொருட்களின் பட்டியல் அன்று இரவு முழுவதும்சரிபார்க்கப்பட்டன.
அதன்படி 600 பவுன் தங்க நகைகள், ரூ.25 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், ரூ.6.25 லட்சம் ரொக்கம், 35 கிலோவெள்ளிப் பாத்திரங்கள், வங்கி லாக்கர்களில் கைப்பற்றப்பட்ட ரூ.55 லட்சத்துக்கான பாஸ்புக் மற்றும் ரசீதுகள், ரூ.3லட்சத்திற்கான வங்கி டி.டி., சொத்து ஆவணங்கள் மற்றும் வீடியோ கேசட்டுகள் ஆகியவை நீதிமன்றத்தில்ஒப்படைக்கப்பட்டன.
இதற்கிடையே புதுக்கோட்டையில் உள்ள பல வங்கிகளிலும் உள்ள ரகுபதியின் லாக்கர்களில் லஞ்ச ஒழிப்புபோலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications