சிங்கப்பூருக்கு கடத்தப்பட்ட 1,830 நட்சத்திர ஆமைகள் மீட்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையிலிருந்து சிங்கப்பூர் கடத்திச் செல்லப்பட்ட 1,830 நட்சத்திர ஆமைகள் மீண்டும் சென்னைக்குக் கொண்டுவரப்படவுள்ளன.

சென்னையிலிருந்து சமீபத்தில் சிங்கப்பூருக்கு ஒரு நபர் நட்சத்திர ஆமைகளைக் கடத்திச் சென்றார். சென்னைவிமான நலையக் கண்காணிப்பிலிருந்து தப்பினாலும் அந்த நபர் சிங்கப்பூரில் பிடிபட்டார். அவரிடமிருந்துபிடிபட்ட ஆமைகளை சென்னைக்கே திருப்பி அனுப்ப சிங்கப்பூர் நிர்வாகம் உத்தரவிட்டது.

மேலும் ஆமைகளை திரும்பவும் சென்னைக்கு அனுப்புவதற்கான செலவுகளையும் பிடிபட்ட நபரிடமே வசூலிக்கஉத்தரவிடப்பட்டது. ஆனால் அந்த நபரிடம் அவ்வளவு பணம் இல்லாததால், அவருக்கு 100 நாட்கள் அதிகமானசிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நபரிடம் பிடிபட்ட 1,830 நட்சத்திர ஆமைகளையும் சென்னைக்குத் திருப்பிஅனுப்ப சிங்கப்பூர் வேளாண்மை மற்றும் கால்நடைத்துறை ஒப்புக் கொண்டது.

தற்போது அவர்களது செலவிலேயே நட்சத்திர ஆமைகள் மறுபடியும் சென்னைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளன.அவற்றை தமிழக அரசின் கால்நடைத்துறை பெற்றுக் கொள்ளும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+