கடத்தலுக்கு புலி ஆதரவாளர்கள் தான் காரணம்: சு.சுவாமி
சென்னை:
முன்னாள் அமைச்சர் நாகப்பா கடத்தப்பட்ட விவகாரத்தில் கர்நாடக உள்துறை அமைச்சர் (காவல்துறை அமைச்சர்) மல்லிகார்ஜூன கார்கேராஜினாமா செய்ய வேண்டும் என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறினார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அதிரடிப்படை விரட்டி வருவதால் வீரப்பன் கர்நாடக காட்டுப் பகுதியில் புகுந்துமிக ஜாலியாக சுற்றித் திரிகிறான். கர்நாடக காங்கிரஸ் கட்சியில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களின் ஆதரவும் வீரப்பனுக்குஉள்ளது.
வீரப்பனின் உதவியுடன் நெடுமாறன், நக்கீரன் நிருபர் சிவ சுப்பிரமணியத்தை விடுவிக்க இந்தத் தலைவர்கள் முயல்கிறார்கள்.
இதன்மூலம் புலிகளை ஒடுக்கும் ஜெயலலிதாவின் தேசப் பற்று மிகுந்த நடவடிக்கைகளை குலைக்க முயற்சி நடக்கிறது என்று சு.சுவாமிகூறியுள்ளார்.
ரஜினி தான் காரணம்:
இது குறித்து அகில இந்திய முஸ்லீம் லீக் பொதுச் செயலாளர் அசிமுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீரப்பனுக்கு எதிராக பெங்களூரில்போய் தேவையில்லாமல் பேசினார் ரஜினிகாந்த்.
இப்போது இந்தக் கடத்தலுக்கு அவர் தான் பொறுப்பேற்ற வேண்டும். ராஜ்குமார் கடத்தல் தொடர்பாக பேசிய ரஜினி இப்போதும் பேசவேண்டும் என்று கூறியுள்ளார்.
ராஜ்குமார் மகன் பேட்டி:
இது குறித்து ராஜ்குமாரின் மூன்றாவது மகனும் நடிகருமான புனித் கூறுகையில், 2 ஆண்டுகளுக்கு முன் எங்கள் குடும்பத்துக்கு ஏற்பட்டநிலைமை இன்று நாகப்பா குடும்பத்துக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடக, தமிழக அரசுகள் என்ன போலீஸ் நடவடிக்கைகள் எடுக்கின்றன என்றுதெரியவில்லை. நாகப்பாவை விடுவிக்க இரு மாநில அரசுகளும் முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.
இந்த புனித் நடித்த அப்பு என்ற கன்னடப் படத்தின் நூறாவது நாள் விழாவில் தான் வீரப்பனைப் பற்றி கன்னடத்தில் திட்டித் தீர்த்தார் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications