கல்லூரி ஆசிரியர் ஸ்டிரைக்: ஒரு பிரிவினர் மட்டும் வாபஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

பல்கலைக்கழகங்களுடன் அரசுக் கல்லூரிகள் இணைக்கப்பட்டாலும் அதன் ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்புக்காக குழு ஒன்று அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறிய உறுதிமொழியைத் தொடர்ந்துதங்களுடைய காலவரையற்ற போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசு கல்லூரி ஆசிரியர்கள்சங்கத்தின் ஒரு பிரிவினர் முடிவு செய்துள்ளனர்.

அரசு கல்லூரி ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் நேற்று ஜெயலலிதாவைச் சந்தித்து இதுகுறித்து பேச்சுவார்த்தைநடத்தினர்.

பேச்சுவார்த்தை ஆரம்பிக்கும் போதே, தமிழகத்தில் உள்ள 67 அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன்இணைக்கும் முடிவில் எந்த மாற்றமும் கிடையாது என்று கூறிவிட்டுத் தான் பேச்சையே துவக்கினார் ஜெயலலிதா.

இதைத் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது அரசுக் கல்லூரி ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு, ஊதியப் பாதுகாப்பு, டி.ஏ.மற்றும் ஓய்வூதியம் ஆகியவை குறித்து முடிவு செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்படும் என்று ஜெயலலிதாஉறுதியளித்தார்.

இந்தக் குழுவிடம் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளைக் கூறலாம் என்றும் முதல்வர் கூறினார். இந்தக் குழுவின்பரிந்துரையைப் பொறுத்து ஆசிரியர்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து முடிவு செய்யப்படும் என்றும்ஜெயலலிதா தெரிவித்தார்.

பேச்சுவார்த்தையின் போது தமிழக கல்வி அமைச்சர் தம்பித்துரை மற்றும் தலைமைச் செயலாளர் சுகவனேஸ்வர்ஆகியோரும் உடன் இருந்தனர்.

இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அரசுக் கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் ஒரு பிரிவான அரசு கல்லூரிஆசிரியர் மன்றம் கூடி விவாதித்தது. ஆசிரியர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று அரசு கூறியுள்ளதால்வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இருந்தாலும் வரும் செப்டம்பர் 3ம் தேதி திட்டமிட்டபடி மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அரசு கல்லூரிஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஆனாலும் இதுகுறித்து இன்று மாலைக்குள் இறுதி முடிவெடுக்கப்படும்என்றும் அதன் தலைவர் பெருமாள் இன்று கூறினார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற