அரசு கல்லூரி ஆசிரியர்கள் ஸ்டிரைக் தற்காலிக வாபஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் மேற்கொண்டிருந்த காலவரையற்ற போராட்டம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 2ம் தேதி முதல் அவர்கள் பணிக்குத் திரும்புகிறார்கள்.

அரசுக் கல்லூரிஆசிரியர்களுக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடந்தது.

அரசுக் கல்லூரிகளை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுடன் இணைப்பதால் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைஅப்போது முதல்வரிடம் ஆசிரியர்கள் விளக்கினர்.

பேச்சுவார்த்தையின் இறுதியில் கமிட்டி அமைப்பதாகவும், ஆசிரியர்கள் நலன் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்வதாகவும் அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து அரசுக் கல்லூரி ஆசிரியர் சங்கத்தைச்சேர்ந்த ஒரு பிரிவினர் (அரசு கல்லூரி ஆசிரியர் மன்றம்) கடந்த வியாழக்கிழமையே ஸ்டிரைக்கை விலக்கிக்கொண்டனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் தனது ஸ்டிரைக்கை வெள்ளிக்கிழமை நீக்கிக்கொண்டது.

வரும் செப்டம்பர் 2ம் தேதி முதல் அனைத்து அரசுக் கல்லூரி ஆசிரியர்களும் பணிக்குத் திரும்புவார்கள் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களிடம் உறுதி கூறியுள்ளபடி ஜெயலலிதா தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும்ஆசிரியர்கள் சங்கம் கேட்டுக் கொண்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+