அவமானம் போதவில்லையா: திமுக பதிலடி
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதிக்கும் நாகப்பா கடத்தலுக்கும் தொடர்பு உள்ளதாக சந்தேகப்படுவதாக கூறியுள்ளதன்மூலம் கருணாநிதிக்கு எதிரான அவதூறுப் பிரசாரத்தில் ஜெயலலிதா ஈடுபட்டுள்ளார் என திமுக பொதுச் செயலாளர்அன்பழகன் கடுமையாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
சோனியா காந்தியை தாறுமாறாக விமர்சிக்கப் போய், அவர் பிரதமராக ஜெயலலிதா ஆதரவு கொடுத்த கடிதத்தைகாங்கிரஸ் கட்சி வெளியிட்டு விட்டது. இதனால் ஏற்பட்ட விரக்தி, அவமானம் தாங்காமல் கருணாநிதி மீது சேற்றைவீசியுள்ளார் ஜெயலலிதா.
கோவாவுக்கு கருணாநிதியும், துரைமுருகனும் மட்டும் போகவில்லை. கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளும்போயிருக்கிறார்.
கருப்புப் பூனைப் படையினர் தவிர, கோவா மாநில உயர் காவல் அதிகாரிகளும் கருணாநிதிக்குப் பாதுகாப்பாகஅங்கு உள்ளனர்.
தொல்காப்பியத்திற்கு உரை எழுதிக் கொண்டிருக்கும் கருணாநிதி, இடையூறு இல்லாமல் எழுதுவதற்காகவேபெங்களூர் போனார். இப்போதும் அதற்காகவே கோவா போயுள்ளார்.
உண்மை இப்படியிருக்க அவதூறாக கருணாநிதி மீது புகார் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாகஎந்தவித விசாரணைக்கும் திமுக தயாராகவே உள்ளது.
அந்த விசாரணையின் முடிவில் ஜெயலலிதாவின் முகத்திரை தான் கிழியுமே தவிர, கருணாநிதிக்கோ திமுகவுக்கோஎந்தவிதமான பங்கமோ, பாதிப்போ நிகழாது.
தமது பொறுப்புக்கு உள்ள மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ளாமல் மக்கள் பிரச்சனைகளைத் திசைதிருப்புவதற்காகவே அவர் இவ்வாறு தேவையற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார் என்று கூறியுள்ளார்அன்பழகன்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications