தமிழகத்துக்கு காவிரி நீர் தர வீரப்பன் நிபந்தனை
பெங்களூர்:
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவைக் கடத்தி வைத்துள்ள வீரப்பனிடம் பேச்சுவார்த்தை நடத்த தூதரைஎப்போது அனுப்பலாம் என்பது குறித்து ஆலோசிப்பதற்காக கர்நாடக அமைச்சரவை இன்று மீண்டும் கூடியது.ஆனால், இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விவரம் வெளியிட அரசு மறுத்துவிட்டது.
இந் நிலையில் வீரப்பன் அனுப்பியுள்ள இரண்டாவது கேசட்டில் காவிரிப் பிரச்சனையில் தமிழகத்தை கர்நாடகம்முதுகில் குத்தி வருவதைக் குறிப்பிட்டு, உடனே தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளதுதெரியவந்துள்ளது.
வீரப்பனைச் சந்தித்து பேச்சு நடத்துவதற்காக மைசூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுப்பு கிருஷ்ணாவை கர்நாடக அரசுதேர்ந்தெடுத்துள்ளது. அதே நேரம் மற்றொரு வழக்கறிஞரான வேணுகோபாலின் பெயரையும் கர்நாடகம் இன்னும்பரிசீலித்து வருகிறது.
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் சுப்பு கிருஷ்ணாவையே அனுப்பலாம் என உளவுப் பிரிவினர்பரிந்துரைத்ததை அமைச்சர்களிடம் கூறினார் முதல்வர் கிருஷ்ணா. அவரை அனுப்ப தானும் விருப்பமாகஇருப்பதாகவும் கிருஷ்ணா கூறினார்.
ஆனால், வழக்கறிஞர் வேணுகோபாலை அனுப்பலாம் என சில அமைச்சர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
இதனால் சுப்பு கிருஷ்ணாவா அல்லது வேணுகோபாலா என்று இறுதி முடிவு எடுக்க கர்நாடக அமைச்சரவை இன்றுமீண்டும் கூடியது.
இக் கூட்டத்தில் தூதரை எப்போது காட்டுக்குள் அனுப்பலாம், அவர் வீரப்பனை அணுக வேண்டிய முறைகள்குறித்து இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
வெளியில் சொல்ல முடியாது:
இக் கூட்டம் முடிந்தவுடன் நிருபர்களிடம் பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே, தூதரைஅனுப்பவது குறித்து என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பதை உங்களிடம் சொல்ல முடியாது. நாகப்பாவை மீட்பதுதான் இப்போதைய முதல் கடமை. அதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
அதிரடிப்படைக்கு முழு அதிகாரம் தரப்பட்டுள்ளது. மாநில டி.ஜி.பி. பாஸ்கர் காட்டுப் பகுதியில் தான்முகாமிட்டுள்ளார். தேவைக்கேற்ப அதிகாரிகள் முடிவெடுப்பர் என்றார்.
நான் சந்திக்கவில்லை:
நான் கர்நாடக அதிரடிப்படையின் தலைவர் சர்மாவையும் சந்திக்கவில்லை என்றார். ஆனால், இன்று காலை வனப்பகுதியில் உள்ள தனது முகாமில் இருந்து பெங்களூர் விரைந்த சர்மா அமைச்சர் கார்கேவை சந்தித்து 15 நிமிடம்பேசிக் கொண்டிருந்தார். இதையும் கார்கே ஏன் மறுத்தார் என்று தெரியவில்லை.
கேசட்டே வரவில்லை:
அதே போல வீரப்பனிடம் இருந்து இரண்டாவது கேசட் ஏதும் வரவில்லை என்றும் கார்கேயும் முதல்வர்கிருஷ்ணாவும் தெரிவித்தனர்.
இனிமேல் இந்த விவகாரத்தில் அரசு எடுக்கும் முடிவுகளை வெளியில் சொல்வதில்லை என்ற முடிவுக்கு அரசுவந்திருப்பதையே கார்கேயின் பேச்சு வெளிப்படுத்தியுள்ளது.
2வது கேசட் நிபந்தனைகள்:
ஆனால், வீரப்பன் இரண்டாவது கேசட் அனுப்பியுள்ளது உண்மை தான் முதல்வர் அலுவலக வட்டாரங்கள்தெரிவிக்கின்றன. அதில் அவன் நான்கு முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்விவரம்:
1. தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனை தமிழக அரசு தேவையில்லாமல் கைது செய்து சிறையில்அடைத்துள்ளது. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
2. நடிகர் ராஜ்குமாரை கடத்திய போது மைசூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தடா கைதிகளை விடுவிக்கவேண்டும் என்று நிபந்தனை விதித்தேன். ஆனால் அதை இன்னும் நிறைவேற்றவில்லை. எனவே அதையும்உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
3.இரு மாநில அதிரடிப்படை வீரர்களும் உடனடியாகக் காட்டை விட்டு வெளியேற வேண்டும். என் பெயரைச்சொல்லி பொதுமக்களைத் துன்புறுத்தக் கூடாது. உடனடியாக இதைச் செய்யாவிட்டால் நாகப்பாவின் தலையைத்துண்டித்து விடுவேன்.
4. தமிழக விவசாயிகள் காவிரி நீர் இல்லாமல் பெரும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர். கர்நாடக அணைகளில்அளவுக்கு அதிகமாகத் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரை உடனடியாகத் திறந்து விட வேண்டும்.
நாகப்பாவை எப்படியும் உயிருடன் மீட்டு விட வேண்டும் என்பதால் அதிரடிப் படையின் செயல்பாட்டை கர்நாடகஅரசு நிறுத்தி வைத்துள்ளது. அதே நேரத்தில் அதிரடிப்படையில் பல புதிய போலீஸ் அதிகாரிகளைச் சேர்க்கும்பணியும் நடந்து வருகிறது.
இதற்கிடையே பேச்சுவார்த்தை நடத்தி நாகப்பாவை மீட்க வேண்டும் என்று லிங்காயத்து ஜாதியைச் சேர்ந்தபல்வேறு மடாதிபதிகள் கர்நாடக முதல்வரை வலியுறுத்தியுள்ளனர். கடத்தப்பட்ட நாகப்பா இதே இனத்தைச்சேர்ந்தவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
வேணுகோபால் பேட்டி:
இதற்கிடையே மைசூரில் நிருபர்களிடம் பேசிய வேணுகோபால், காட்டுக்குச் செல்ல நான் தயார். வீரப்பன் என்னைச் சந்திக்க ஒப்புக்கொண்டால் உடனடியாக இரு மாநில அதிரடிப் படையின் தேடுதல் வேட்டையையும் நிறுத்தி வைக்கச் செய்வேன் என்றேன் என்றார்.
சுப்பு கிருஷ்ணா:
மைசூரைச் சேர்ந்த சுப்பு கிருஷ்ணா கூறுகையில், இரு மாநில நலன்களுக்காகவும் தூது செல்லத் தயாராக இருக்கிறேன். இதற்காக எந்தத்தியாகமும் செய்யத் தயார் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications