For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூரில் 12ம் தேதி காவிரி பந்த்: பீதியில் தமிழர்கள்

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

தமிழகத்துக்கு காவிரியில் நீர் விடுவதை எதிர்த்து வரும் 12ம் தேதி (வியாழக்கிழமை) பெங்களூரில் பந்த் நடத்தப் போவதாக ராஜ்குமார்ரசிகர் மன்றம் உள்ளட்ட பல கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளன.

அன்றைய தினம் தமிழர்கள் மீது இந்த அமைப்பினர் தாக்குதல் நடத்தவும் வாய்ப்புள்ளதால் பெரும் பெங்களூரில் பெரும் பதற்றம் பரவஆரம்பித்துள்ளது.

கன்னட சலுவளி கட்சியின் தலைவரும் தீவிர தமிழர் எதிர்ப்பாளருமான வாட்டாள் நாகராஜ் தலைமையில் பல்வேறு கன்னட அமைப்புகள்இந்த பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதில நடிகர் ராஜ்குமார் ரசிகர் மன்றம் (காவிரிக் கலவரத்தில் தமிழர்களைத் தாக்கிய முக்கியஅமைப்பு இது), கர்நாடக சங்கர்ஷ சமிதி, கன்னட சலுவளி கேந்திர சமிதி, கர்நாடக ஹிதரக்ஷன வேதிகே, அகில கர்நாடக முகமதிய ரக்ஷனவேதிகே ஆகிய அமைப்புகள் இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

இவர்களுக்கு பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும் ஆதரவு தர உள்ளன.

இந்தப் போராட்டத்தை ஒட்டி பெங்களூரில் அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும் என்று இந்த அமைப்புகள் எச்சரிக்கைவிடுத்துள்ளன.

நகரில் வாகனங்களை இயங்க விட மாட்டோம், அனைத்து பள்ளி, கல்லூரி, அலுவலகங்களையும் மூட வேண்டும் என்றும் இந்தஅமைப்புகள் கூறியுள்ளன.

இந்த அமைப்புகள் அனைத்துமே தமிழர் எதிர்ப்புணர்வையே மூலதனமாக வைத்து செயல்பட்டு வருபவை என்பதால் இந்த பந்த்தமிழர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, நாகப்பா கடத்தப்பட்டதையடுத்து தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இப்போது இந்தபந்த் மிரட்டலால் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டிய கடைமை மாநில அரசுக்கு உண்டு.

இந்த பந்தினால் தமிழக வாகனங்கள் வரும் செவ்வாய்க்கிழமை இரவே பெங்களூர் செல்வது நிறுத்தப்பட்டுவிடும் என்று தெரிகிறது.

தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அன்றைய தினம் வாகனத்தை வெளியில் கொண்டு செல்லாமல் தவிர்ப்பதுநல்லது.

இதற்கிடையே 11ம் தேதியே (புதன்கிழமை) இந்த பந்த்தை நடத்தவும் ஒரு பிரிவினர் முயன்று வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X