எல்லாம் மொத்தமாக முடங்க போகுது? இனி நாடு முழுக்க ஒர்க் ஃப்ரம் ஹோம்! மத்திய அரசு அதிரடி! என்ன காரணம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த 3 மாதங்களாகவே வளைகுடாவில் போர் தொடரும் நிலையில், இது கச்சா எண்ணெய் விலையைப் புதிய உச்சத்தை நோக்கி நகர்த்தி வருகிறது. இதற்கிடையே மத்திய அரசு திடீரெனப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக மத்திய அமைச்சர்கள் தேவையில்லாத பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நேரடி மீட்டிங் கட் செய்யப்பட்டு வீடியோ கன்பரன்சிங்கிற்கு முக்கியத்துவம் தர முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கு ஆசியாவில் நீடிக்கும் போர் பதற்றத்தால் சர்வதேச எரிசக்தி சந்தை நிச்சயமற்றதாக மாறியுள்ளது. கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டிவிட்ட நிலையில், இப்போது 110 டாலரை நோக்கி நகர்ந்து வருகிறது. இது இந்தியா போன்ற கச்சா எண்ணெய்யை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு மிகப் பெரிய தலைவலியாக மாறியுள்ளது.

India returns to Work from Home Modi Work from Home

பிரதமர் மோடி கோரிக்கை

சமீபத்தில் கூட பிரதமர் மோடி இது தொடர்பாக வெளிப்படையாகவே மக்களுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார். மக்கள் தேவையில்லாத பயணங்களைத் தவிர்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். மேலும், அந்நியச் செலாவணி வீணாவதைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் தங்கத்தை வாங்க வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதிரடி முடிவு

இதற்கிடையே மக்களுக்கு நாமே முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பது போல மத்திய அரசு இப்போது பல அதிரடி நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது. முதற்கட்டமாக அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் தேவையற்ற பயணங்களுக்குக் கடிவாளம் போட டெல்லி தயாராகி வருகிறது. இனி அமைச்சர்களின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் பெருமளவில் குறைக்கப்படும். மேலும், கருத்தரங்குகள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்கள் அனைத்தும் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒர்க் ஃபர்ம் ஹோம்

இது செலவைக் குறைப்பதற்கான நடவடிக்கை அல்ல, மாறாக நாட்டின் எரிபொருள் தேவையைச் சிக்கனப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான நகர்வு என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், கர்தவ்ய பவனில் பணியாற்றும் அதிகாரிகள், தங்களின் சொகுசு கார்களைத் தவிர்த்துவிட்டு மெட்ரோ போன்ற பொதுப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல், கொரோனா காலத்தைப் போலவே மீண்டும் 'வொர்க் ஃபிரம் ஹோம்' மற்றும் ஹைபிரிட் முறைகளில் பணியாற்றவும் திட்டங்கள் போடப்பட்டுள்ளன.

மேலும், அரசு நடத்தும் பிரம்மாண்ட விருந்துகள் மற்றும் அதிக கேஸ் சிலிண்டர்கள் தேவைப்படும் நிகழ்வுகளையும் சற்றே குறைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த உள்நாட்டுச் சிக்கனம், விரைவில் தனியார் துறைகளுக்கும் பொதுமக்களுக்கும் ஒரு வழிகாட்டியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலைமை இன்னும் மோசமானால், திருமணங்கள் மற்றும் பொதுக் கூட்டங்களின் பிரம்மாண்டத்தைக் குறைப்பது குறித்தும் ஆலோசனைகள் நடந்து வருகின்றன.

பிரச்சினை என்ன

நிதி ரீதியாக இந்தியாவிடம் தட்டுப்பாடு இல்லையென்றாலும், எரிபொருள் மேலாண்மையில் சவால்கள் நீடிப்பதாகப் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். நம்மிடம் தற்போது 60 நாட்களுக்கான கச்சா எண்ணெய் இருப்பும், 45 நாட்களுக்கான எல்பிஜி இருப்பும் இருந்தாலும், எண்ணெய் நிறுவனங்கள் நாளொன்றுக்குச் சுமார் 1,000 கோடி ரூபாய் வரை நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன.

சிக்கனம்

2022க்குப் பிறகு பெட்ரோல் விலையில் பெரிய மாற்றங்கள் செய்யப்படவில்லை. இப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரியளவில் உயர்ந்துவிட்ட நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் மிகப் பெரிய நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது. இந்தச் சுமையை எவ்வளவு காலம் அரசு தாங்கும் என்ற கவலை நிதி அமைச்சகத்திற்கு எழுந்துள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவு அதிகரிப்பதோடு, மக்கள் வாங்கும் தங்கமும் அந்நியச் செலாவணி கையிருப்பைப் பாதிக்கத் தொடங்கியுள்ளதால், "நெருக்கடி வந்த பிறகு பதறுவதை விட, நெருக்கடியைத் தவிர்க்கச் சிக்கனம்" என்ற பாதையை கையில் எடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+