Perambur Power Cut: பவர் இல்லை சிஎம்! பெரம்பூர் பகுதியில் 3 நாட்களாக தொடர் மின்வெட்டு! தூக்கத்தை தொலைத்த மக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பெரம்பூர் தொகுதியில், அதாவது முதல்வர் விஜய்யின் தொகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர் மின்வெட்டை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோடைக் காலம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே மீண்டும் மின்வெட்டு பிரச்சினை தலை தூக்கியுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் இந்த மின்வெட்டு இரவு நேரங்களில் இருப்பதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

Power Cut

இரவு நேரங்களில் பல மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளதால் இதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மின் வாரிய அலுவலகத்தினர் போனை எடுக்காததால் நேராக அந்த அலுவலகத்திற்கே அவர்கள் செல்கிறார்கள். அங்கு அதிகாரிகள் முறையாக பதில் தெரிவிக்காததால் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள்.

இந்த நிலையில் நள்ளிரவு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு அருகே கரிகாட்டுக்குப்பம் பகுதியில் 3 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் கொந்தளித்து போன பொதுமக்கள் 150-க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை போல செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியில் சுமார் 3 மணி நேரமாக மின்வெட்டு நீடித்ததால் மின்சார அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 10 நாட்களாக தொடர் மின்வெட்டு ஏற்படுவதாகக் குற்றம்சாட்டினர். பெரம்பூர் தொகுதியில் மின்வெட்டை கண்டித்து இரவில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

பொன்னேரியை அடுத்த ஆரணியிலும் 1 மணி நேரத்திர்கும் மேலாக நீடித்த மின்வெட்டைக் கண்டித்து, நள்ளிரவில் சாலை மறியலில் மக்கள் ஈடுபட்டனர். அண்மைக்காலமாக இரவு நேரங்களில் தொடர்ந்து மின்தடை ஏற்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.

சென்னைவாசிகள் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் கொளுத்தி எடுத்ததால் வியர்வை, புழக்கம், கொசுக்கடியில் தவித்து வருகிறார்கள். இதில் அவ்வப்போது ஏற்படும் மின்வெட்டால் மின்வாரிய உதவி எண்களுக்கு தொடர்பு கொண்டாலும் அது எப்போதும் பிஸியாகவே உள்ளது. இதில் புகார் தெரிவித்தாலும் உடனடியாக தீர்த்து வைக்கப்படுவதும் இல்லை. இதனால் இரவு நேர மின்வெட்டை நினைத்து பொதுமக்கள் அச்சத்தில் உறைய தொடங்கிவிட்டார்கள்.

கூலி வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணிகள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், இணைநோயால் அவதிப்படுவோர் என தூக்கத்தை தொலைத்து அவதிப்படுகிறார்கள்.

இதனால் மன அழுத்தம் ஏற்படுவதாகவும் உடல்நிலை மேலும் பாதிக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. முட்டுக்காட்டை தொடர்ந்து சென்னை பெரம்பூர் உதயசூரியன் நகர், சத்தியமூர்த்தி நகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக ஏற்படும் தொடர் மின்வெட்டைக் கண்டித்து நேற்றிரவு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிலும் முதல்வர் விஜய்யின் தொகுதியிலேயே பவர் கட் என்பதை மக்களால் நம்ப முடியவில்லை.

முதல்வர் விஜய் வசித்து வரும் நீலாங்கரை பகுதியில் கூட கடந்த சில தினங்களுக்கு முன்பு பவர் கட் ஏற்பட்டு மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். போராட்டமும் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+