திருச்செந்தூர்: படகுகள் மோதலில் 3 மீனவர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே புன்னக்காயல் என்ற இடத்தில் நடுக்கடலில் நாட்டுப் படகு மீது விசைப் படகு மோதியதில் 3மீனவர்கள் பரிதாபமாக பலியாயினர்.

புன்னக்காயலைச் சேர்ந்த ராஜ் என்பவரது நாட்டுப் படகில் ஐந்து மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர்.

அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, விசைப் படகு ஒன்று அவர்களது படகு மீது பயங்கரமாக மோதியது.

இதில் நாட்டுப் படகு இரண்டாகப் பிளந்தது. ஐந்து மீனவர்களும் கடலில் மூழ்கினர்.

இதில் இரண்டு மீனவர்கள் தட்டுத் தடுமாறி நீந்தி கரைக்கு வந்து விட்டனர். ஆனால் ராஜ், ஜெனி, அரசன் ஆகியமூன்று மீனவர்களும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

புன்னக்காயல் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+