புலிகள் மீதான தடையை நீக்க வைகோ கோரிக்கை
சென்னை:
தாய்லாந்தில் நடந்து வரும் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறவும், இலங்கைத் தமிழர்களுக்கு நல்வாழ்வு கிடைக்கவும்விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கைவிடுத்துள்ளார்.
1984ம் ஆண்டு திமுகவினர் மீது நடந்த தாக்குதல் தொடர்பான வழக்கில் வைகோவும் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த வழக்குவிசாரணை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணை இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. இதையடுத்து மயிலாடுதுறை நீதிமனறத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்வைகோ.
இதற்காக வேலூர் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அவர் நேற்றே திருச்சி சிறைக்குக் கொண்டு வரப்பட்டார். இரவு அங்குதங்க வைக்கப்பட்ட அவர் இன்று காலை மயிலாடுதுறை கொண்டு வரப்பட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு இந்த வழக்குத் தொடர்பான எப்.ஐ.ஆரின் நகல் வழங்கப்பட்டது. பின்னர் வழக்குவிசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி.
இதையடுத்து மீண்டும் வேலூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார் வைகோ. முன்னதாக அவரைக் காண நூற்றுக்கணக்கானமதிமுகவினர் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் கூடியிருந்தனர்.
அவர்களை நோக்கி கையசைத்தவாரே வைகோ நீதிமன்றத்துக்குள் சென்றார்.
பின்னர் தனது வழக்கறிஞர் நன்மாறன் மூலமாக அங்கு கூடியிருந்த நிருபர்களிடம் ஒரு அறிக்கையை வெளியிட்டார் வைகோ.அதில் அவர் கூறியிருப்பதாவது:
தாய்லாந்து அமைதி பேச்சு வெற்றி பெற இந்தியா உதவ வேண்டும். அந்தக் கடமை இந்தியாவுக்கு உண்டு. இந்தப் பிராந்தியத்தின்அமைதியைக் கருத்தில் கொண்டும் புலிகள் மீதான தடையை மத்திய அரசு நீக்க வேண்டும்.
கடந்த 50 ஆண்டுகளாய் ஒடுக்கப்பட்டு வந்த இலங்கைத் தமிழ் மக்களுக்கு இந்தப் பேச்சுவார்த்தைகள் ஒரு விடியலாகும்.இதன்மூலம் நல்ல காலம் பிறக்கும் என்ற நம்பிக்கை எல்லோர் மனதிலும் ஓங்கி நிற்கிறது.
அதே போல பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர் பகுதிகளை மறு சீரமைக்கவும் இந்தியா உதவ வேண்டும். இலங்கைத்தமிழர்கள் அமைதியாக வாழ உதவ வேண்டியது இந்தியாவின் கடமை.
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை கர்நாடகம் அவமதித்து வருகிறது. விவசாயிகளைத் தூண்டிவிட்டு அணையைை மூடச்செய்து தமிழகத்தை ஏமாற்றி வருகிறது கர்நாடகம்.
தமிழகத்துக்கு நியாயமான தண்ணீர் கிடைக்கச் செய்ய அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி முதல்வர் ஜெயலலிதா விவாதிக்கவேண்டும். அதைச் செய்யாமல் எதிர்க்கட்சிகளை வசை பாடுவதை ஜெயலலிதா கைவிட வேண்டும். மாநிலத்தின் நலனைகெடுக்கக் கூடாது. எதிர்க் கட்சிகளை அவமதிப்பதை ஒரு வேலையாக செய்து வருகிறார் ஜெயலலிதா.
இவ்வாறு தனது அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.
இதற்கிடையே வைகோ கைதை எதிர்த்து திருச்சியில் இருந்து நடை பயணமாகப் புறப்பட்ட நூற்றுக்கணக்கான மதிமுகதொண்டர்கள் நேற்று வேலூர் வந்து சேர்ந்தனர். இக் குழுவின் பிரதிநிதிகள் வைகோவை சிறையில் சென்று சந்தித்துப் பேசினர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications