காஷ்மீரில் நாளை 2வது கட்டத் தேர்தல்: தீவிர பாதுகாப்பு
ஸ்ரீநகர்:
பாகிஸ்தான் தீவிரவாதிகளின் பெரும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் காஷ்மீரில் நாளை 2வது கட்ட சட்டசபைத் தேர்தல்நடைபெறவுள்ளது.
காஷ்மீரில் கடந்த 16ம் தேதி முதல் கட்டத் தேர்தல் மிகவும் அமைதியாக நடந்து முடிந்தது. சுமார் 47 சதவீதம்வாக்குகள் வரை பதிவாகின.
இந்தியத் தலைவர்கள் மட்டுமல்லாமல் உலக நாடுகளின் தலைவர்களும் காஷ்மீரில் முதல் கட்டத் தேர்தல் சுமூகமாகமுடிவடைந்ததைப் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
ஆனால் இந்தத் தேர்தல் முடிவடைந்த கடந்த ஒரு வாரத்தில் தீவிரவாதிகளின் அட்டூழியம் தலை தூக்கி விட்டது.
கடந்த வாரம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த காஷ்மீர் சுற்றுலாத் துறை அமைச்சரான சகீனா இட்டூவைத் தாக்கிதீவிரவாதிகள் கொல்ல முயன்றனர். அவரைக் கொல்வதற்கு மூன்று முறை அவர்கள் முயன்றும் ஒவ்வொருமுறையும் அவர் மயிரிழையில் தப்பி விட்டார்.
மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஒரு போலீஸ் காலனியில் புகுந்த தீவிரவாதி ஒருவன்அங்கிருந்தவர்களை நோக்கிச் சராமாரியாகச் சுட்டான். ஆனால் போலீசாரும் ராணுவத்தினரும் இந்தத்தாக்குதலைத் திறமையாகச் சமாளித்து சுற்றி வளைத்து அவனைச் சுட்டுக் கொன்றனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கின் மேலும் பல்வேறு பகுதிகளிலும் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்கி வருகின்றனர்.தீவிரவாதிகளின் தாக்குதல்களில் 12க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே எல்லை வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருப்பதும் நின்றபாடில்லை. நேற்று இரவும் கூட இந்தியாவுக்குள் நுழைய முயற்சித்த ஏழு பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்தியராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.
இந்நிலையில் முதல் கட்டத் தேர்தலை விட நாளை நடைபெறவுள்ள இரண்டாவது கட்டத் தேர்தலின் போதுபெருமளவில் தாக்குதல் நடத்தவும் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதையடுத்து நாளை தேர்தல் நடைபெறவுள்ள 28 தொகுதிகளிலும் வரலாறு காணாத அளவுக்கப் பாதுகாப்புஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காஷ்மீரின் தலைநகர்களான ஜம்முவிலும் ஸ்ரீநகரிலும் கூட நாளை தான் தேர்தல்நடைபெறவுள்ளது என்பதால் தீவிரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாளைய தேர்தலில் மட்டும் 263 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தீவிரப் பாதுகாப்புஅளிக்கப்பட்டுள்ளது. சுமார் 22 லட்சம் பேர் வாக்களிப்பதற்காக 2,099 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
நாளை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை இரண்டாவது கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்வீடன், ஆஸ்திரேலியா, கிரீஸ், நெதர்லாந்து, ஜப்பான், ஜெர்மனி மற்றும்கனடா நாடுகளைச் சேர்ந்த 15 வெளிநாட்டுப் பார்வையாளர்கள் நாளை இந்த இரண்டாவது கட்டத் தேர்தலைபார்வையிடவுள்ளனர். முதல் கட்டத் தேர்தலை 28 வெளிநாட்டினர் பார்வையிட்டனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications