அமைச்சரின் அதிரடி சோதனைகள்: ரயில்வே அதிகாரிகள் "திக் திக்"
மதுரை:
மதுரை ரயில் நிலையத்தின் அனைத்துப் பகுதிகளையும் சுற்றிப் பார்த்த ரயில்வேத்துறை இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, அதிகாரிகளுக்கு அவ்வப்போது சூடும் கொடுத்தார்.
தமிழகத்திலேயே சிறப்பான, சுத்தமான ரயில் நிலையம் என்று அடிக்கடி பெயர் வாங்கிக் கொண்டிருக்கும் மதுரைரயில் நிலையத்திலும் உள்ள பல்வேறு குறைகளை மூர்த்தி கண்டுபிடித்தார்.
பிளாட்பாரத்தில் நடந்து பார்வையிட்டுக் கொண்டிருந்த அவர் அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு கடையில் திடீரென்றுநின்று அங்கு வைக்கப்பட்டிருந்த மினரல் தண்ணீர் பாட்டில்களைச் சோதனையிட்டார்.
அப்போது அங்குள்ள ஏராளமான பாட்டில்கள் ஒழுகிக் கொண்டிருப்பதைப் பார்த்து கோபமடைந்த மூர்த்தி, அந்தக்கடைக்கான உரிமையை ரத்து செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதே போல் ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாமல் விற்கப்படும் பாட்டில்களை உடனடியாகப் பறிமுதல் செய்யவும் அவர்உத்தரவிட்டார்.
பின்னர் போர்ட்டிகோ அருகே மின்னிக் கொண்டிருந்த "மொபைல் போன்" விளம்பரப் பலகையைப் பார்த்து,இதற்கான மின் கட்டணத்தை செலுத்துவது யார் என்று கேட்டார்.
தொடர்ந்து, அங்குள்ள போர்ட்டிகோ முழுவதையும் அந்த மொபைல் போன் கம்பெனியே கிரானைட் கற்களைப்போட்டு அழகுபடுத்த வேண்டும் என்றும் அவர்களே மின் கட்டணத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றுஉத்தரவிட்ட மூர்த்தி, அந்த கான்ட்ராக்டை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்றும் கூறினார்.
அதன் பின்னர் பிளாட்பாரத்தில் உள்ள ஒரு சிமெண்ட் பெஞ்ச்சில் உட்கார்ந்து பார்த்த மூர்த்தி, "என்ன பெஞ்ச் இது?சாய்ந்து உட்காருவதற்கு வசதியாக ஒரு சாய்மானம் கூட இல்லையென்றால் பயணிகளுக்கு அசெளகரியமாகஇருக்காதா?" என்று கேட்டுக் கொண்டே, அந்த சிமெண்ட் பெஞ்ச்சுகளுக்குப் பதிலாக சேர்களைப் போட வேண்டும்என்றும் உத்தரவிட்டார்.
பிளாட்பாரங்களில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களையும் டம்ளர்களையும் மாற்ற வேண்டும் என்றும் மூர்த்திஉத்தரவிட்டார்.
பின்னர் அங்கிருந்த ரயில்வே போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றார் மூர்த்தி. சமீபத்தில் பெங்களூருக்கு ரயில்களில்கடத்தப்பட்ட கள்ளச் சாராயம் பறிமுதல் செய்யப்பட்ட போது எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டது என்று அவர்கேட்டறிந்தார்.
அமைச்சரின் அடுக்கடுக்கான சோதனைகளால் மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகள் மிகவும் அரண்டு தான்போய்விட்டனர். இருந்தாலும் மூர்த்தியின் இத்தகைய நடவடிக்கைகளால் மதுரை ரயில் நிலையம் மேலும் பொலிவுபெறும்.
-->
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications