அத்வானியை கொல்ல திட்டமிட்ட இமாம் அலி
பெங்களூர்:
பெங்களூரில் இன்று சுட்டுக் கொல்லப்பட்ட இமாம் அலி உள்ளிட்ட தீவிரவாதிகள் துணைப் பிரதமர்அத்வானியையும் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியையும் கொல்லத்திட்டமிட்டிருந்ததாக தமிழகப் போலீசார் இன்று தெரிவித்தனர்.
கடந்த ஜூலை மாதமே அகமதாபாத் சென்றிருந்த ஜோஷியைக் கொல்வதற்கு இமாம் அலி திட்டமிட்டிருந்தான்என்றும் பின்னர் எதனாலோ அந்தத் திட்டத்தைக் கைவிட்டு விட்டான் என்றும் கோயம்புத்தூர் டி.ஐ.ஜி.அஷிடோஷ் சுக்லா இன்று நிருபர்களிடம் கூறினார்.
ஜோஷியைக் கொன்றுவிட்டு அப்படியே அவன் அலகாபாத் செல்லத் திட்டமிட்டதாகவும் கூறிய சுக்லா, பின்னர்அந்தத் திட்டங்கள் அனைத்தையும் நிறுத்திவிட்டு, தமிழகத்தில் உள்ள சில கோவில்களைக் குண்டு வைத்துத்தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்டான் என்றும் தெரிவித்தார்.
இமாம் அலியின் "ஹிட் லிஸ்ட்"டில் அத்வானி மற்றும் விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் அஷோக் சிங்கல்ஆகியோரின் பெயர்களும் இருந்தன என்றும் தெரிவித்த சுக்லா தமிழக மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள்அவனுடைய இந்தத் திட்டங்கள் குறித்து ஏற்கனவே எச்சரித்திருந்தனர் என்றும் கூறினார்.
மேலும் மதுரை மாநகரப் போலீஸ் துணை கமிஷனரான ஷகீல் அக்தர் மற்றும் தமிழக சிறைத்துறை போலீஸ் துணைகமிஷனரான மூர்த்தி ஆகியோரையும் கொல்வதற்கு இமாம் அலி திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அதற்குமுன்பாகவே அக்தர் மற்றும் சுக்லா தலைமையிலான போலீசார் அவனைக் கொன்று விட்டனர்.
கடந்த மே 10ம் தேதியே இமாம் அலி உள்ளிட்ட தீவிரவாதிகளை திருவனந்தபுரத்தில் பிடிக்க தமிழகப் போலீசார்முயற்சித்தனர் என்றும் ஆனால் அவன் மயிரிழையில் தப்பிவிட்டான் என்றும் சுக்லா கூறினார்.
காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்பிடம் பயிற்சி பெற்ற இமாம் அலி பின்னர்பங்களாதேஷில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பிடமும் பயிற்சி பெற்றான். ஏ.கே.47 துப்பாக்கிகளை சர்வசாதாரணமாக கையாள்வதில் இவன் வல்லவன் என்றும் சுக்லா தெரிவித்தார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications