தரமற்ற உணவு: ரயில் கேன்டீன் உரிமம் ரத்து- அமைச்சரின் அதிரடி
விழுப்புரம்:
தரமற்ற உணவை விநியோகித்ததற்காக நாகர்கோவில்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலின் கேன்டீன் உரிமத்தை ரத்துசெய்ய மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி உத்தரவிட்டார்.
விழுப்பும்-செங்கல்பட்டு இடையே திடீரென்று திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை மேற்கொண்டார் மூர்த்தி.
அப்போது ரயிலில் உள்ள கேன்டீனில் தரமற்ற உணவு பயணிகளுக்கு விற்கப்படுவதை அறிந்தார். இதுதொடர்பாகபல பயணிகளும் அமைச்சரிடம் புகார் செய்தனர்.
மேலும் கேன்டீனில் இருந்த ஊழியர்கள் பேட்ஜ் அணியாமல், உரிய பாஸ் இல்லாமல் இருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அந்த கேன்டீன் உரிமத்தை ரத்து செய்யுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
இதேபோல ரிசர்வேஷன் பெட்டிகளில் ரிசர்வ் செய்யாமல் பயணித்த 15 பயணிகளுக்கு அபராதம் விதித்தார்.ரயிலுக்குள் விற்பனையில் ஈடுபட்டிருந்த சில வியாபாரிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
-->












Click it and Unblock the Notifications