பஹ்ரைனில் வேலை வாங்கி தருவதாக ரூ.6 லட்சம் மோசடி: 3 பேர் கைது
கோயம்புத்தூர்:
பஹ்ரைனில் வேலை வாங்கித் தருவதாக ரூ.6 லட்சம் வரை மோசடி செய்த அந்நாட்டைச் சேர்ந்த ஒருவரையும்தமிழகத்தைச் சேர்ந்த 2 பேரையும் பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் "பால்கன் டிராவல்ஸ்" என்ற நிறுவனத்தை நடத்தி வந்தவர்கள், பஹ்ரைனில் உள்ள சுகாதாரத்துறைஅமைச்சகத்தில் நர்சுகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஆகிய பணிகளுக்காக ஆட்கள் தேவைப்படுவதாகசெய்தித் தாள்களில் விளம்பரம் கொடுத்திருந்தனர்.
கேரளாவில் உள்ள சில செய்தித் தாள்களில் இந்த விளம்பரங்கள் வெளியாகியிருந்தன.
இதை நம்பி 61 பேர் வரை இந்த நிறுவனத்தில் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும்ரூ.10,000 வரை "பால்கன் டிராவல்ஸ்" நிறுவனம் கறந்து விட்டது.
ஆனால் விண்ணப்பித்தவர்களுக்கு இன்டர்வியூ நடத்தவோ, அவர்களை பஹ்ரைனுக்கு அனுப்புவது குறித்தோஒரு நடவடிக்கையிலும் அந்த நிறுவனத்தினர் ஈடுபடவில்லை.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் "பால்கன் டிராவல்ஸ்"நிறுவனத்தின் உரிமையாளரையும் மானேஜரையும் போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே பஹ்ரைனில் உள்ள ஒரு வேலைவாய்ப்பு ஏஜென்ட்டான இப்ராஹிம் அப்துல் கரீமை இதுதொடர்பாகக் கைது செய்ய அந்நாட்டு தூதரகம் மூலம் அனுமதி கேட்கப்பட்டது. பின்னர் அவரும் கைதுசெய்யப்பட்டார்.
இதுபோன்ற பல போலி வேலைவாய்ப்பு நிறுவனங்கள் நாள்தோறும் வளர்ந்து கொண்டிருப்பதாகவும்,அவர்களிடம் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் பொருளாதார குற்றப் பிரிவுஐ.ஜி. ஷியாம்சுந்தர் கூறினார்.












Click it and Unblock the Notifications