பி.எஸ்சி. போலீஸ் அறிவியல்: சென்னை பல்கலையில் அறிமுகம்
சென்னை:
சென்னை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. போலீஸ் அறிவியல் என்ற புதிய பட்ட வகுப்பு தொடங்கப்படுகிறது.
இதுதொடர்பான ஒப்புதல் பல்கலைக்கழக சிண்டிக்கேட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய வகுப்புகள் அடுத்த கல்விஆண்டில் தொடங்கும்.
எம்.ஏ. பயன்பாட்டு வரலாறு, எம்.எஸ்சி. விஸூவல் கம்யூனிகேஷன், பி.எட். சிறப்பு கல்வி, பி.ஏ. மற்றும் எம்.ஏ.பயன்பாட்டு சமஸ்கிருதம் ஆகியவை உள்ளிட்ட பல புதிய படிப்புகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
பி.எஸ்சி. போலீஸ் அறிவியல் படிப்பில் கிமினாலஜி, மனித நடத்தைகள், கம்ப்யூட்டர், இந்திய அரசியலமைப்புச்சட்டம், உள்ளூர் சட்டங்கள், தாக்குதல், ஆயுதப் பயிற்சி, புலனாய்வு பயிற்சி, குதிரையேற்றம், கார் ஓட்டுதல், நீச்சல்உள்ளிட்ட காவல்துறையினருக்கான பயிற்சிகள் அனைத்தும் செயல்முறையாகவும், பாட வழியாகவும் சொல்லித்தரப்படும்.
இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை பல்கலைக்கழகத்தில் தான் இப்பாடம் அறிமுகப்படுத்தப்படுகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications