நாடாளுமன்றத்தில் அண்ணா, தேவர், தீரர் சிலைகள் திறப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மறைந்த பேரரறிஞர் சி.என். அண்ணாத்துரை, தீரர் எஸ். சத்தியமூர்த்தி மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்ஆகிய தமிழ் தலைவர்களின் சிலைகளை நாடாளுமன்ற வளாகத்தில் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் இன்றுதிறந்து வைத்தார்.

திராவிட இயக்கத்தின் தூண்களில் ஒருவரான அண்ணாதுரையின் சிலையை தமிழக அரசு அன்பளிப்பாக வழங்கியது.

சமூக சீர்திருத்தவாதியும், தலித்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதி பெற்றுத் தந்தவருமான தீரர் சத்தியமூர்த்தி மற்றும் தேசவிடுதலைக்காகப் போராடிய நேதாஜியின் ராணுவத்துக்கு பல உதவிகள் புரிந்த பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆகியோரின் சிலைகளை முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியம் சுவாமி நன்கொடையாகவழங்கினார்.

இந்த மூன்று சிலைகளின் திறப்பு விழாவும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. டாக்டர் கலாம் இந்தமூன்று சிலைகளையும் திறந்து வைத்தார்.

அஸ்ஸாம் அரசு வழங்கிய அம்மாநிலத்தின் சுதந்திரப் போராட்ட வீரரரும் முன்னாள் முதல்வருமான கோபிநாத்போர்டொலாயின்சிலையும் அப்போது திறந்துவைக்கப்பட்டது.

இந்தச் சிலைகள் திறப்பு விழாவில் துணை ஜனாதிபதி பைரோன் சிங் ஷெகாவத், பிரதமர் வாஜ்பாய், மக்களவைசபாநாயகர் மனோகர் ஜோஷி, ராஜ்யசபா காங்கிரஸ் தலைவர் மன்மோகன் சிங், அஸ்ஸாம் முதல்வர் தருண்கோகாய், மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், பொன்னையன், தமிழகத்தின்அனைத்துக் கட்சி எம்.பிக்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக அந்த நான்கு தலைவர்களின் அரிய புகைப்படங்கள் அடங்கிய ஒரு புகைப்படக் கண்காட்சியும் திறந்துவைக்க்பட்டது. அதனை கலாமும் வாஜ்பாயும் பார்வையிட்டனர்.

இத் தலைவர்களின் பெருமையை விளக்கும் கையடக்க புத்தகங்களும் வெளியிடப்பட்டன.

இந்த சிலை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் ஜெயலலிகா டெல்லி செல்வதாக இருந்தது. ஆனால், தனதுபயணத்தை ஜெயலலிதா ரத்து செய்துவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+