பணிந்தது தமிழக அரசு: கல்லூரி ஆசிரியர்-மாணவர் போராட்டம் வாபசாகுமா?
சென்னை:
அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளதைத் தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டம் விலக்கிக் கொள்ளப்படும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் சேர்ப்பது தொடர்பாக ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட நிபுணர் குழுதனது அறிக்கையை ஜெயலலிதாவிடம் சமர்ப்பித்தது.
ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து ஆராய இந்தக் குழு நியமிக்கப்பட்டது. இருப்பினும் தங்களின்கோரிக்கைப்படி கமிட்டி அமைக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள ஆசிரியர்கள் இந்தக் குழுவைஏற்கனவே நிராகரித்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமைச் செயலாளர் சுகவனேஸ்வர் தலைமையிலான இக்குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டஜெயலலிதா இன்று கூறுகையில்,
பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட பின்னரும் அரசுக் கல்லூரி ஆசிரியர்களும் அலுவலர்களும் அரசுஊழியர்களாகவே கருதப்படுவார்கள்.
அவர்களுக்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்த சலுகைகள் அனைத்தும் எப்போதும் போலவே இனியும் கிடைக்கும்.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மாணவ-மாணவிகளுக்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்தஇட ஒதுக்கீடு முறையே தொடர்ந்து அளிக்கப்படும். மாணவ-மாணவிகளைத் தேர்ந்தெடுக்கும் கல்லூரிமுதல்வர்களின் அதிகாரங்களும் குறைக்கப்பட மாட்டாது.
மேலும் மாணவ-மாணவிகளின் கல்விக் கட்டணத்திலும் எந்த விதமான மாறுதலும் இருக்காது.
எனவே ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொண்டுள்ளதால்,அவர்கள் தங்களுடைய போராட்டங்களைக் கைவிட்டு கல்லூரிக்குத் திரும்ப வேண்டும். கல்வியின் தரத்தைமேலும் மேலும் உயர்த்துவதற்கு அவர்கள் பாடுபட வேண்டும் என்றார் ஜெயலலிதா.
பல்கலைக்கழகங்களுடன் அரசுக் கல்லூரிகள் இணைக்கப்பட்டால் கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் மற்றும்இட ஒதுக்கீடு ஆகியவற்றால் மாணவர்கள் பாதிக்கப்படலாம் என்று கருதித் தான் மாணவர்கள் தீவிரப் போராட்டம்நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இருந்தாலும் ஜெயலலிதாவின் இன்றைய அறிவிப்பிற்குப் பின்னர் போராட்டம் வாபஸ் பெறுவது குறித்துஆசிரியர்களோ, மாணவர்களோ இதுவரை எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.
மாணவர்கள் போராட்டம் தீவிரம்:
முன்னதாக தமிழகம் முழுவதும் அரசுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் இன்றும் தீவிரமடைந்தது.
கும்பகோணத்தில் அரசுக் கல்லூரி மாணவர்கள் பாடைகளைக் கட்டி சுமந்து சென்று போராட்டம் நடத்தினர்.திருச்சி தேசியக் கல்லூரி மாணவர்களும் இன்று போராட்டம் மேற்கொண்டனர்.
இந்நிலையில் மதுரை மீனாட்சி அரசுக் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் அங்குள்ள தலைமை தபால்-தந்திஅலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள். பின்னர் அவர்கள் போலீசாரால் அங்கிருந்துஅப்புறப்படுத்தப்பட்டனர்.












Click it and Unblock the Notifications